கரூர்: ''வாகன பதிவின் போது வழங்கும் பேன்சி எண்களை கூட லஞ்சம் கொடுத்து பெறும் நிலை உள்ளது,'' என, தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசினார்.
கரூரில், தி.மு.க., சார்பில் பொங்கல் விழா நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வும், மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி பேசியதாவது: வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக வாகன பதிவு செய்யும் போது, பேன்சி எண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, குறிப்பிட்ட தொகை அரசுக்கு செலுத்த வேண்டும். தற்போது ஒரு எண்ணுக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எண்ணை பெற முடியும் என்ற அவல நிலை உள்ளது. மேலும், அரசு போக்குவரத்து கழகத்திற்கு பஸ் பாடி கட்ட, தனியாரிடம் ஒப்பந்தம் விடும்போது, அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்க, நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். கடந்த, ஆறு மாதங்களாக வாகனங்கள் இயக்கப்படாத நிலையில், கட்டாயமாக வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல், போக்குவரத்து துறையில் ஊழல் மலிந்து விட்டது. இந்த குற்றச்சாட்டுகளில் தவறு இருந்தால், என் மீது வழக்கு போட்டு கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார். மாநில சட்டத்துறை இணை செயலாளர் மணிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE