கரூர்: 'மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம்' என, எம்.எல்.ஏ., கீதா பேசினார்.
கரூர் மாவட்டம், புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில், 219 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா வழங்கி பேசியதாவது: போட்டி நிறைந்த உலகில் எந்த துறையாக இருந்தாலும், நமக்கு சவால்கள் அதிகம் உள்ளன. இதை எதிர்கொள்ள தன்னம்பிக்கை, திட்டமிடுதல் அவசியம். அனைவருக்கும் பொது அறிவுத் தேடல் இருக்க வேண்டும். புத்தகங்களை வாசித்தால்தான் பொது அறிவைப் பெற முடியும். பிற மாநிலங்கள், தமிழகத்தை கண்டு பொறாமைப்படும் வகையில், மாணவ, மாணவியருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம், கல்விக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்தான். இவ்வாறு, அவர் பேசினார். தலைமையாசிரியர் ஜோதி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE