நாமக்கல்: தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து, பொதுக்கூட்டம் ஒன்றில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் கீரம்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
* குமாரபாளையத்தில், நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* திருச்செங்கோட்டில், எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி தலைமை வகித்தார்.
* பள்ளிபாளையத்தில், நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். நகர பேரவை செயலாளர் சுப்ரமணி பேசினார். பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலாளர் செந்தில்; வடக்கு ஒன்றியம் சார்பில், வெப்படையில் ஒன்றிய செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், பாண்டமங்கலம், பொத்தனூர், ப.வேலூர், பரமத்தி என, மாவட்டம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE