ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் திருத்தேர் திருவிழா, தை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. காலை, 11:15 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் மீன லக்கனத்தில் கொடியேற்று விழா நடந்தது. இரவு, அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல், வரும், 20 வரை தினசரி காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் பல்லக்கு உற்சவம், இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானத்தில் புறப்பாடு மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 21 அதிகாலை, 3:30 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல், திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 22 காலை பல்லக்கு உற்சவம், இரவு, 7:00 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வருதல்; 23 மாலை, 6:00 மணிக்கு வசந்த உற்சவம்; 24 மாலை, 6:00 மணிக்கு புஷ்ப யாகம்; 25 இரவு, 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE