டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (7+ 35)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக 2வது முறையாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 197 பேர் ஓட்டு போட்டனர்.அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரு அதிபருக்கு எதிராக 2வது முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர்,
டிரம்ப், அதிபர் டிரம்ப், பதவிநீக்கம், தீர்மானம், அமெரிக்க பார்லிமென்ட், பிரதிநிதிகள் சபை,

வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக 2வது முறையாக பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 197 பேர் ஓட்டு போட்டனர்.அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரு அதிபருக்கு எதிராக 2வது முறை பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்றுள்ள, கேப்பிடோஸ் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று, டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர். மொத்தம் 232 பேரில், 187 பேர் டிரம்ப்பிற்கு எதிராக ஓட்டளித்தனர்.


latest tamil news


பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், செனட் சபை 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள்(ஜன.,20) ல் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

அதற்கு பிறகு, செனட் சபை, இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்கலாம் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
15-ஜன-202109:26:57 IST Report Abuse
Appan இதில் வேடிக்கை என்ன என்றால் பாராளுமன்றத்திலே டிரம்புக்கு எதிராக ஒட்டு போட்டாலும் கட்சி எம்.பி கல், பாராளுமன்றத்திலே அவர்களை சுட்டு விடுவார்கள் என்று சில எம்.பி க்கள் பய படுகிறார்களாம். அதோடு அவர்களின் குடும்ப நபர்களையும் மிரட்டுகிறார்களாம்.இதனால் நான்ஸி பெலோஷி பாராளுமன்றத்திற்கு துப்பாக்கி கொண்டுவரக்கூடாது என்று சொல்லி Metal detector வைத்து உள்ளார்களாம்..அமெரிக்க உண்மையாகவே ஒரு Cow Boy நாடு..பிடிக்கவில்லைனால் சுட்டுவிடுவார்கள்..இதோடு இப்போ அமெரிக்க ஒரு வெள்ளைக்காரர்களின் நாடாக மாற பார்க்கிறது..ஆனால் உண்மை நிலை வேறு...
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
14-ஜன-202120:17:00 IST Report Abuse
visu 20. ஆம் தேதி அவர் பதவி முடிந்துவிடும் செனட்டில் டெமோகிராட்ஸ் மஜுரிட்டி கிடையாது ஆகவே அவர் பதவி காலத்தை முடித்துவிட்டு ஓய்வு பெறுவர். அந்த கிழவி நான்ஸி பேலஸ்சி அவர்களுக்கு மஜுரிட்டி இல்லை என்று தெரிந்தும் இரெண்டாவது முறையாக இம்பீசெக்மென்ட் செய்கிறார் தவிர 25. வழியாக துணை அதிபர் டிரம்ப் பய் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் அவரது வயிற்றெரிஸல். டிரம்ப் அவமானப்படுத்த அவர் உரையை மேடையிலேயே கிழித்தவர் நான்சி impeach. செய்ய தேவை என்ன கேட்டல் அடுத்த முறை தேர்தலில் நிற்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால் அவர் ஜெய்த்து விட முடியும் என்று பயம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202117:07:42 IST Report Abuse
Endrum Indian இதை விட பெரிய அவமானம் கிடையாது டிரம்ப் உனக்கு, நீ அந்த விஷ ஊசியை போட்டு கொள்வதே சரியானது. உலகிலே மிக மிக உயர்ந்த பதவி என்பது அமெரிக்க ஜனாதிபதி பதவி.
Rate this:
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
14-ஜன-202122:32:43 IST Report Abuse
Raviஜனநாயக கட்சினர் மூன்று நான்குமாதம் அவர்கள் ஆளும் மாகாணங்களில் உள்ள பொது மக்களின் சொத்துக்களை கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடியது அவமானம் இல்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X