அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பேன்; ராகுல்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
மதுரை: அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் இருந்து ரசித்தனர். அப்போது, ராகுல் பேசுகையில், தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என தெரிவித்தார்.ஜல்லிக்கட்டுபொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, அவனியாபுரம், ஜல்லிக்கட்டு, திமுக, தி.மு.க., உதயநிதி, உதயநிதிஸ்டாலின்

மதுரை: அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் இருந்து ரசித்தனர். அப்போது, ராகுல் பேசுகையில், தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என தெரிவித்தார்.


ஜல்லிக்கட்டு


பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பார்த்தார். சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று பிடிப்பதை ரசித்தார், ராகுல். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் ராகுலும் உரையாடியபடியே ஜல்லிக்கட்டை கண்டுகளித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராகுல், உதயநிதி பரிசு வழங்கினர். அப்போது, ராகுல் பேசுகையில் தமிழ் மொழி, பாரம்பரியம் கலாச்சாரத்தை பாதுகாப்பது என் கடமை. தமிழ் மக்களுக்கு என்றும் துணையிருப்பேன் என உறுதியளித்தார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும், இன்று முதல் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, உலக அளவில் வரவேற்பை பெற்றது. இன்று, மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.


வீரர்களுக்கு பரிசு


இதனை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், திமுக இளைஞரணி செயலர் உதயநிதியும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடியவாறே ரசித்தனர். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் வந்தனர். ஜல்லிக்கட்டு குறித்து போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ராகுலும், உதயநிதியும் பரிசு வழங்கினர்.


latest tamil news

இந்தியாவிற்கு அவசியம்


இந்த விழாவில் ராகுல் பேசியதாவது : தமிழர்களின் பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜல்லிக்கட்டு விழா சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வு, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன். தமிழ் மொழியும், கலாசாரமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. தமிழை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கவே வந்துள்ளேன். தமிழக மக்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். தமிழக மக்களோடு நின்று, தமிழ் பண்பாட்டையும், வரலாற்றையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர், மதுரை தென்பழஞ்சியில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல் கலந்து கொண்டார். இந்த விழாவில், பொது மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.


விவசாயிகள் புறக்கணிப்பு


விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ராகுல் ; தமிழ் கலாசாரம் மிகவும் பாராட்டுதலுக்குரியது. தமிழ் கலாசாரத்தையும், தமிழ் உணர்வையும் அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி கொள்கை தவறானது. மத்திய அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. விவசாயிகளின் வளங்களை மத்திய அரசு தாரை வார்க்க பார்க்கிறது. விவசாயிகளே இந்தியாவின் முதுகெலும்பு. கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் எவ்வித உதவியும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsமுதல்முறை

உதயநிதி பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். மதுரை என்றாலே வீரம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்முறையாக வந்துள்ளேன். தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க வருவேன். விழாவினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி . இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஜன-202113:22:44 IST Report Abuse
Sridhar ரோமாபுரிக்கும் பாண்டிய நாட்டுக்கும் சரித்திர கால தொடர்பு உள்ளதே. ராகு தமிழ் பண்பாட்டை காப்பேன் என்றால், அந்த எண்ணம் அவர் மரபணுவிலிருந்து வருகிறது என நம்பலாம். ஆனால், அவர் கட்சி ஏழெட்டு வருஷங்களுக்கு முன் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து அவர் வெளிவந்து தமிழ் கலாச்சாரத்தை, பெருமைகளை வெளிப்படையாக பாராட்டுவது மிகவும் போற்றத்தக்கது - தேர்தலுக்கு பிறகு மாறாமல் இருந்தால் அவர் வெறும் அரசியல்வாதியா, இல்லை ரோமாபுரி ரத்தமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
15-ஜன-202110:47:14 IST Report Abuse
Gopal இவனுக்கு இந்திய கலாச்சாரமே தெரியாது. அப்புறம் தானே தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேச. எதோ வாய்க்கு வந்த படி உளறிட்டு போயிடுது பப்பு.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-ஜன-202109:02:31 IST Report Abuse
Matt P இப்படி ஆளாளுக்கு தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்துவேன் என்று இறங்கிட்டா... அப்புறம் இத்தாலி இந்தி கலாச்சாரத்தை யாரு காப்பாத்துங்க.
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
15-ஜன-202109:41:47 IST Report Abuse
Vaanambaadiபாலஸ்தீன கலாச்சாரம் ஏற்கெனவே பரவிக்கிடக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X