பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு பார்க்க வந்தார் துள்ளிக்கிட்டு : டிரெண்டிங்கில் ராகுல்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
மதுரை : மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் நேரில் கண்டு ரசித்தார். அவரின் மதுரை வருகை, ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் விழா பங்கேற்பு விஷயங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வு ஜல்லிக்கட்டு. மதுரையில் நடக்கும்
VanakkamRahulGandhi, Madurai, Jallikattu, Rahul,

மதுரை : மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் நேரில் கண்டு ரசித்தார். அவரின் மதுரை வருகை, ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் விழா பங்கேற்பு விஷயங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வு ஜல்லிக்கட்டு. மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, உலக அளவில் வரவேற்பை பெற்றது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் இன்று முதல் அடுத்தடுத்து மூன்று தினங்கள் நடக்கிறது.


latest tamil news
அவனியாபுரத்தில் இன்று(ஜன., 13) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேரில் சென்று ரசித்தார். அவருடன் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் வந்தனர். ஜல்லிக்கட்டு குறித்து போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ராகுலும், உதயநிதியும் பரிசு வழங்கினர்.

விழாவில் பேசிய ராகுல், ''தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்'' என்றார்.


latest tamil news
முன்னதாக மதுரை வந்த ராகுலுக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றதோடு, அங்கு நடந்த விருந்து நிகழ்வில் பொதுமக்கள் உடன் அமர்ந்து உணவு அருந்தினார். ராகுல் மதுரை வந்து ஜல்லிக்கட்டு பார்த்த நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ''எளிமையான தலைவர் என்றால் ராகுல் தான், மக்களோடு மக்களாக எப்படி பயணிக்கிறார், உண்மையான தலைவர் ராகுல் தான்'' பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரின் வருகை மற்றும் பொங்கல் நிகழ்வில் பங்கேற்ற போட்டோ, வீடியோக்களை அதிகம் பகிர்ந்தனர். இதனால் டுவிட்டரில் #VanakkamRahulGandhi, #Madurai, #Jallikattu உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆனது. அதேசமயம் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #Goback_Rahul என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
15-ஜன-202119:34:06 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN கவுல் பிராம்மணர், சிவ பக்தர் முக்கிய ஹிந்துப் பண்டிகையில் கலந்து கொள்வது வெகு பொருத்தம் தானே என்று கறுப்பர் கூட்ட தாய்க் கட்சி பக்கமிருந்து ஒரு முனகல் வந்தாப்ல பேசிக்கறாங்க..கேட்டுச் சொல்லுங்க.
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
15-ஜன-202108:08:31 IST Report Abuse
NoBs இந்த மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதை தவிர ஒரு தகுதியும் இருப்பதாக எவரும் சொல்லல .......தமிழ்நாட்டில் இதே மாதிரி ஒரு சில குடும்பங்கள்.......இவர் பிதற்றுவதற்கு கையே தட்ட ஆட்கள் .....எல்லாம் தலையெழுத்து ...
Rate this:
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
15-ஜன-202112:32:13 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM மோடிக்கு மட்டும் என்ன வழுதாம் அவர் நல்லவர் வல்லவர் என்று ஒரு கும்பல் சொல்லியே காலத்தை ஓடுகிறது வேறு ஒன்னும் இல்லை காலத்தின்கட்டயம் வரும் வரை இது நடக்கும்...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202119:02:45 IST Report Abuse
Malick Rajaகழுதைக்கு கற்ப்பூரவாசனை தெரியாது என்று சும்மாவா சொன்னார்கள் .....
Rate this:
Cancel
15-ஜன-202107:17:17 IST Report Abuse
S.Balakrishnan. ராகுல் சீன் போடுவதை தேவைக்கு அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. வயதானவர்களுடன் சாப்பிடுவது, கூட்டத்தில் கொக்கரிப்பது எல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் சம்பிரதாயமாகி விட்ட இந்த டிராமாக்கள் புளித்துப் போய் விட்டது. சரியான தொண்டர்களை ஊக்குவித்து கோஷ்டி அட்டகாசத்திற்கு முடிவு கட்ட உருப்படியான வேலையை செய்தால் அழிந்து கொண்டிருக்கும் கட்சிக்கு உயிர் தண்ணீர் விட்டது போல் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X