ஜகார்த்தா: கடந்த புதனன்று சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் உலகின் பழங்கால குகை ஓவியம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் வரைந்துள்ள ஓர் பன்றி குகை ஓவியம் பழம்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மாக்ஸிம் ஆல்பர்ட் கூறுகையில், இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் கடந்த 2011-ஆம் ஆண்டு பழம்பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு இருந்த பழமையான லிங்க்ஸ்டேட் குகைக்குள் உள்ள லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து ஆராய்ச்சி நடந்தது.

அப்போது 136 செ.மீ., நீளமும் 54 செ.மீ., அகலமும்கொண்ட ஓர் பன்றியின் ஓவியம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பன்றி மற்றொரு பன்றியை நோக்கி இருப்பதுபோல இந்த பழங்கால ஓவியம் காட்சியளிக்கிறது. மற்றொரு பன்றியின் ஓவியம் சிதிலமடைந்துள்ளது. இந்தோனேசியாவின் இந்த தீவில் கடந்த 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடியினர் இதனை வரைந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இது தற்போது பழம்பொருள் பிரியர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE