மேற்கு வங்கம், உ.பி.,யில் ஒவைசி உதவுவார் : பா.ஜ., எம்.பி., கிண்டல்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
லக்னோ: ஒவைசியை பா.ஜ.க.,வின் பி அணி என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், “பீகார் தேர்தலில் எங்களுக்கு உதவினார். மேற்கு வங்க தேர்தலிலும் அவர் உதவுவார்.” என்று பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகராஜ் கூறினார்.ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டது ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி. இக்கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவுப்படுத்தி வருகிறார்.
Asaduddin Owaisi ,Owaisi,  BJP MP,  UP, Bengal, Polls B.J.P,BJP,Bharatiya Janata Party,Uttar Pradesh, உத்தரபிரதேசம், பா.ஜ

லக்னோ: ஒவைசியை பா.ஜ.க.,வின் பி அணி என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், “பீகார் தேர்தலில் எங்களுக்கு உதவினார். மேற்கு வங்க தேர்தலிலும் அவர் உதவுவார்.” என்று பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகராஜ் கூறினார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டது ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி. இக்கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவுப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் இவர் கட்சி தனித்து களமிறங்கியது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் 5 தொகுதிகளை கைப்பற்றினார். அதே சமயம் எதிர்க்கட்சிகளுக்கு விழ இருந்த முஸ்லிம் வாக்குகளை பிரித்து அவர்களின் தோல்விக்கு வழிவகுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் 15 சீட்டுகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது.

அடுத்த ஆண்டு உ.பி.,யில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக ஒவைசி உ.பி.,யில் முகாமிட்டுள்ளார். பா.ஜ.,வுடன் முன்னர் கூட்டணியில் இருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த டிசம்பரில் கூறியிருந்தார். செவ்வாயன்று அக்கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பருடன் முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த அசம்கர் பகுதியை பார்வையிட்டார்.


latest tamil newsஐதராபாத் எம்.பி., உ.பி.,யில் முகாமிட்டிருப்பது பற்றி பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகாராஜிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். “இது இறைவனின் அருள். இறைவன் அவருக்கு பலமளிக்கட்டும். பீகாரில் எங்களுக்கு உதவினார். அதே போன்று மேற்கு வங்கத்திலும், பின்னர் உத்தர பிரதேசத்திலும் உதவுவார்.” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒவைசியை பா.ஜ.க.,வின் பி டீம் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜன-202113:09:30 IST Report Abuse
Bhaskaran ஒவைசியைத்தான் ஒருஅஸ்திரமாக பயன்படுத்தும்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
15-ஜன-202111:47:03 IST Report Abuse
Suppan ஒவைசியை ஆதரிக்கும் கட்சிகள் பின்னால் வருத்தப்படுவார்கள். ஒவைசி போன்றவர்கள் சரியான புல்லுருவிகள். திமுக போல நாட்டிற்கு தேவையில்லாத விஷ ஜந்துக்கள்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜன-202111:26:36 IST Report Abuse
Rasheel உங்க ஆளுங்க படிக்காதிதினால்தான் பெண்கள் நிலை மிக கேவலமாக உள்ளது. உலகத்தில் வன்முறை ஒழிய வேண்டுமானால் உங்கள் ஆட்கள் படிக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X