அறிவியல் ஆயிரம்
பிளாஸ்டிக் கொடூரம்
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது மனித உடலுக்குள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி யில் தெரிய வந்துள்ளது. இத்தாலியில் தன்னார்வலர் களாக 12 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற பின், அவர்களின் நஞ்சுக்கொடியை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு வழங்கினர். இதை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் 12 பேரில் ஆறு பேரின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 12 நுண் துகள்களை கண்டுபிடித்தனர். இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் சுரங்கம்
தேசத்தின் ஹீரோக்கள்
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜன., 15ல் இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ராணுவ தலைமை பொறுப்பு அவர்கள் வசம் தான் இருந்தது. 1949 ஜன., 15ல் இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் பார்க்காமல் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE