பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளக்காடானது நெல்லை, தூத்துக்குடி:குடியிருப்புகளை சூழ்ந்தது தாமிரபரணி வெள்ளம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருநெல்வேலி:தொடர்மழையினால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. தாமிரபரணிகரையோர மக்கள் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர், வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதுவரை இல்லாதஅளவில் மாஞ்சோலை எஸ்டேட்டில் நேற்று 517 மி.மீ.,மழை பெய்தது. மேற்குதொடர்ச்சி

திருநெல்வேலி:தொடர்மழையினால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. தாமிரபரணிகரையோர மக்கள் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர், வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.latest tamil newsதிருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதுவரை இல்லாதஅளவில் மாஞ்சோலை எஸ்டேட்டில் நேற்று 517 மி.மீ.,மழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணைகள் கிடுகிடுவென நிரம்பிவிட்டன.


latest tamil newsபாபநாசத்தில் 178 மி.மீ., மணிமுத்தாறில் 162 மி.மீ.,சேரன்மகாதேவியில் 120 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 91 மி.மீ.,மழை பெய்தது.ஏற்கனவே நிரம்பியுள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி, ராமநதி அணைகளில் இருந்து வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியாகிறது. நேற்று 60 ஆயிரம் கனஅடிநீர் ஆற்றில் சென்ற நிலையில் நேற்று மழை குறைவு காரணமாக 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இருபு்பினும் சீவலப்பேரியை அடுத்துள்ள மருதுார் அணைக்கட்டை கடந்து வினாடிக்கு 71 ஆயிரத்து 142 கனஅடி நீரும், அதன் பிறகு உள்ள ஸ்ரீவைகுண்டம் அணை கடந்து வினாடிக்கு 81 ஆயிரத்து 918 கனஅடிநீர் கடலை நோக்கி சென்றது.தாமிரபரணி வெள்ளத்தால் சேரன்மகாதேவி, வண்ணார்பேட்டை உள்ளிட்ட ஆற்றோரங்களில் தவித்த மக்கள் மீட்கப்பட்டனர்.


latest tamil news


Advertisementவெள்ளக்காடானாது:1992ம் ஆண்டிற்கு பிறகு தாமிரபரணியில் கடந்த சில தினங்களாக செல்லும் வெள்ளநீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, ஆத்துார், ஏரல், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது பிசான நெல் பயிர் நடவு பணிகள் முடிந்து ஒன்றரை மாதம் ஆகும் நிலையில் வெள்ளம் நெற்பயிர்களையும், வாழைகளையும் சூழ்ந்து சேதப்படுத்தியுள்ளது. தாமிரபரணிக்கரையோரங்களில் வசிக்கும் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் புளியங்குளம், கருங்குளம் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நீர் ரோட்டை கடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்தனர்.
இந்த மழை நீர் முற்றிலும் குறைவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் ஆகும் நிலை உள்ளது. மேலும் மழை நீடித்தால் பாதிப்புகள் ஏற்படும்.


latest tamil news
குடிநீர் சப்ளை பாதிப்பு:திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மோட்டார்கள் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் குடிநீர்சப்ளை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர்சப்ளை செய்யப்பட்டது. மாலையில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, கலெக்டர் விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அபூர்வா, போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், எஸ்.பி.,மணிவண்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர்கள் குழுவினர் வெள்ளம் பாதித்த ஒரு சில இடங்களை பார்வையிட்டனர்.


latest tamil news
வெள்ளத்திலும் வறட்சி:தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடிநீர் வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால் தாமிரபரணியில் இருந்து சாத்தான்குளம் பகுதிக்கு திறந்துவிடப்படும் சடையநேரி கால்வாய், மணிமுத்தாறு கால்வாய் மூலம் செல்லும் திசையன்விளை, சுவிசேஷபுரம் உள்ளிட்ட நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளுக்கு முறையான கால்வாய் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனிப்பின்மையால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு இன்னமும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.


latest tamil newsதுாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை கடந்து தாமிரபணி ஆற்றில் வினாடிக்கு 81 ஆயிரத்து 918 கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.


latest tamil newsதாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளம் துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராம குடியிருப்புகளை சூழ்ந்தபடி செல்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆறு இருபுறமும் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழைப்பயிர்களை சூழ்ந்துள்ளது.


latest tamil newsதாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சென்றாலும் திருநெல்வேலியில் மக்கள் குடிநீருக்கு மாநகராட்சி லாரிகளை எதிர்நோக்கியிருந்தனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
15-ஜன-202111:37:47 IST Report Abuse
TamilArasan அட போங்கடா திராவிட கொடுங்கோல் ஆட்சியாளர்களே...இன்னும் நெல்லை மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பாமல் இருக்கு - குறிப்பாக உடன்குடி, திருச்செந்தூர், ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் - திராவிடம் மண்ணு பண்ணு என்று புரட்டும் விடும் நீங்கள் எல்லாம் இப்படி நீரை வீணாக கடலில் கொண்டு சேர்க்கதான் லாயக்கு...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
15-ஜன-202110:02:37 IST Report Abuse
venkatan தென் தமிழகம் இன்னும் பல வளர்ச்சி நிலைகளில் கவனிக்க பட வேண்டும். சென்னை மட்டுமே தமிழகம் இல்லை. கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை தஞ்சை, திருச்சியின் தென்பகுதி போன்றவை இன்னும் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையில் உள்ளன.இவைகளுக்கு செயல்படுத்தக்கூடிய மாஸ்டர் பிளான் தேவை..
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-ஜன-202105:21:25 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இன்னும் பல தடுப்பணைகள் கட்டி வீணாகி கடலில் கலக்கும் நீரை சேமித்தால் மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன் படுத்தலாம். எதிலும் அரசியல் செய்யும் வைகோ போன்றவர்கள் இருக்கும் வரை இந்த பகுதியை முன்னேறவே விட மாட்டார்கள். ஸ்ரீவைகுண்டம் அணையில் மிகுதியாகி சேர் தங்கி விட்டது. அதை தூர் வாரினால் நிறைய நீரை சேமிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X