பொது செய்தி

இந்தியா

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சபரிமலை: பொன்னம்பலமேட்டில் இன்று மாலை 6:30க்கு காட்சியளித்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரள மாநிலம், சபரி மலை ஐய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் இன்று மாலை 6:30க்கு காட்சியளித்த மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.latest tamil newsகேரள மாநிலம், சபரி மலை ஐய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.பந்தளம் அரண்மனையில் தான், அய்யப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின், அய்யப்பனைக் காண, பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார்.அதை நினைவு படுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது. பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள், சாஸ்தா கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.


latest tamil news
ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டதற்கு பின்னர் பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. சரண கோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனி வந்தனர்.

இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். மகரசங்கராந்தி தினமான இன்று மகாதீபாராதனை நடைபெற்றது. அதுமுடிந்ததும், மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி தெரிந்தது.ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வரும் 18ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. 19ஆம் தேதி வரை யில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மற்றும்மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202111:20:17 IST Report Abuse
சம்பத் குமார் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
15-ஜன-202110:14:28 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN சாமியே சரணம் ஐயப்பா ....சாமியே சரணம் ஐயப்பா ....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜன-202108:27:58 IST Report Abuse
Bhaskaran கேரளா அரசும் வனத்துறையும் சேர்ந்து பக்தர்களை ஏமாற்ற ஏற்றும் ஜோதி இது .இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .அய்யப்பன் அருளால் பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X