சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த அக்காள், தம்பி பலி

Added : ஜன 14, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:புல் அறுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற சகோதரியும் பலியானார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளத்தை சேர்ந்தவர் விஜயராஜ் 45. அவரது சகோதரி விஜயலட்சுமி 50, வீட்டில் வசித்துவந்தார்.திருமணமாகவில்லை. வீட்டில் கால்நடைகளுக்கு புல்அறுப்பதற்காக பகல் ஒரு மணியளவில், அங்குள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அறுந்து

திருநெல்வேலி:புல் அறுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற சகோதரியும் பலியானார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கள்ளிகுளத்தை சேர்ந்தவர் விஜயராஜ் 45. அவரது சகோதரி விஜயலட்சுமி 50, வீட்டில் வசித்துவந்தார்.திருமணமாகவில்லை. வீட்டில் கால்நடைகளுக்கு புல்அறுப்பதற்காக பகல் ஒரு மணியளவில், அங்குள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பிற்பகல் 3:00 மணிக்கு தம்பியை தேடி விஜயலட்சுமி அங்கு சென்றார். அங்கு விஜயராஜ் இறந்து கிடப்பதை பார்த்து அருகில் சென்றவரும் மின்வயரை மிதித்ததில் அவரும் மி்ன்சாரம் தாக்கி பலியானார். குருவிகுளம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X