சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

Added : ஜன 14, 2021
Share
Advertisement
ஊட்டி:மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக நகர் மற்று ரூரல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் மேக மூட்டம் நிலவுகிறது. பகல் நேரங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா,
மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி:மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக நகர் மற்று ரூரல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் மேக மூட்டம் நிலவுகிறது. பகல் நேரங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரியில், மழை தீவிரமடைந்தது. மாலை, 5:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரி மழை அளவு, 4.04 மி. மீ., மழை பதிவாகியுள்ளது.
மாலை, மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில், கேரிங்டன் அருகே சாலையோரத்தில் இருந்த பாறை கற்கள் சரிந்து சாலை நடுவே விழுந்தது. பஸ் போக்குவரத்து தடைப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, உதவி செயற்பொறியாளர் பாலசந்திரன் தலைமையில், நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் பாறைகளை உடைத்து அகற்றும் பணி நேற்றிரவு வரை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X