நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி?

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
புதுடில்லி:நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை அளிக்கும் வகையில், வரும் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிரது. குறிப்பாக, வருமான வரி விலக்குக்கான வரம்பு இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், 2020 - 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும், பிப்.,1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்
 நடுத்தர வர்க்கத்தினர், பட்ஜெட், நல்ல செய்தி, மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன்,

புதுடில்லி:நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை அளிக்கும் வகையில், வரும் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிரது. குறிப்பாக, வருமான வரி விலக்குக்கான வரம்பு இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின், 2020 - 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும், பிப்.,1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த பட்ஜெட்டில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சில சலுகைகள் அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீள்வதற்காக, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சலுகைகள், தற்சார்பு இந்தியா என்ற பெயரில் அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டிலும் தொடர வாய்ப்புள்ளது.மத்திய வருவாய் பிரிவினருக்கு, வருமான வரியில் சில சலுகைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த, இரண்டு பட்ஜெட்டுகளில், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், வருவாய் வரி விலக்கு, 2.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது.அதை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, 3.5 கோடி வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.அதைப் போலவே, நிரந்தரக் கழிவு, 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

மருத்துவ செலவு, விடுமுறை பயண ஈட்டுக்கான விலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால், நிரந்தரக் கழிவை,ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பஞ்சப் படி ஒரு சதவீதம் போட போறார் நடுத்தர வர்க்கத்தினருக்கு குஷிதான் கார் வாங்க புக் பண்ணிடலாம்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜன-202116:08:43 IST Report Abuse
g.s,rajan In India it is better to Introduce Expiture tax as it in Foreign countries instead of Income tax.It is high time to abolish Income tax in India. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
15-ஜன-202120:13:40 IST Report Abuse
Edwin மேலை நாடுகளில் இருப்பது போல் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட நிலையான வரியை கழித்து மீதம் உள்ள தொகையை கொடுக்கலாம். உதாரணமாக ஒருவர் அறுபதாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்குவதாக வைத்துக்கொண்டால் அதில் பத்தாயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டுமெனில் ஐம்பதாயிரம் ரூபையை மட்டும் கொடுத்தால் போதுமானது. அந்த ஊழியர் அவரது சம்பளம் ஐம்பதாயிரம் ரூபாய் மாத சம்பளம் என நினைத்து அதற்கு தகுந்த செலவை செய்வார்கள். தேவை இல்லாமல் வருடம் தோறும் வருமான வரி கணக்கை சமர்ப்பிக்க தேவையில்லை. வருமான வரியை குறைக்க தேவையற்ற முதலீடுகளையும் செய்ய அவசியமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X