பாக்., இந்துகோவில் இடிப்பு வழக்கு; 12 போலீசார் இடைக்காலப் பணிநீக்கம்

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை

பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தருவர்.



latest tamil news



இந்த கலவரத்துக்கு 33 பாகிஸ்தான் போலீசார் உதவிகரமாக இருந்ததற்காக இவர்கள்மீது ஓராண்டுக்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் புதியதாக சில மாற்று கட்டுமானங்கள் செய்ய இந்து அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கோவிலில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டன. இந்த புதிய கட்டடம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீயிடப்பட்டது.
இந்த மாகாணத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கோகட் ரீஜன் இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். இந்த வன்முறை சம்பவம் நடந்தபோது அதனை தடுக்க முயலாமல் அஜாக்கிரதையாக இருந்த 73 பாகிஸ்தான் போலீசார் மீது விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. இதில் 12 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு இடைக்கால பணிநீக்கம் அளிக்கப்பட்டது.


latest tamil news



கோவிலை சேதப்படுத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா ஷரீப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சேதப்படுத்தப்பட்ட இந்த கோயிலை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று பாக்., சிறுபான்மையினர் நல அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜன-202115:16:42 IST Report Abuse
கொக்கி குமாரு அதுல பாருங்க, பெயரில்லாமல் திரியும் ஒருவர் கூட இங்கு வந்து கண்டனம் தெரிவிக்கவில்லை. உள்ளூர சந்தோசம் போல. இந்துக்களுக்கு இருக்கும் பரந்த மனப்பான்மை எந்த ஒரு மதத்தினரிடமும் பார்க்க இயலாது. ஆனால் இளிச்சவாயன் இந்துக்கள் ஒன்றாக மட்டும் இருக்கமாட்டான்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
15-ஜன-202113:19:12 IST Report Abuse
Indian  Ravichandran உலக அமைதியா முழுமையாக கெடுக்கும் ஒரு மூர்க்க மதம் அதில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானிய ஹிந்துக்கள். இந்த மூர்க்க மதத்தினருக்கு பல நாடுகளில் வாழ இடம் கொடுத்து விட்டு தினமும் தீவிரவாதத்தை சந்தித்து வரும் நிலை. ஒரே இறைவன் என்ற பழமை வாத கோஷத்தின் கீழ் அடுத்த மனிதர்களின் கலாட்சாரத்தை வெறுக்கும் இவர்களே உலகமே வெறுக்க வேண்டும். அந்த நாள் வரும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜன-202111:18:05 IST Report Abuse
Rasheel மத காட்டுமிராண்டிகள்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-202114:04:16 IST Report Abuse
தமிழவேல் ஜாதி, மதம் என்று அலைந்ததாலே அப்படிதான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X