பெங்களூரு:''நாட்டின் சுயமரியாதைக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் வல்லரசு நாடுகளுக்கு தகுந்த பதிலடி தர நம் வீரர்கள் தயாராக உள்ளனர்'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஆயுதப்படை வீரர்கள் தினமான நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம் விமானப்படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 83 அதிநவீன இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.இது நம் விமானப்படையின் திறனை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்லும்.
மேலும் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும்.எந்த நாட்டுடனும் சண்டையிட இந்தியா விரும்பவில்லை. அமைதி மற்றும் நட்புறவு நம் ரத்தத்திலும் கலாசாரத்திலும் ஊறியுள்ளது.நாம் எப்போதும் போரை விரும்பியதில்லை. ஆனால் நமசுயமரியாதைக்கு ஊறுவிளைக்க நினைக்கும் வல்லரசு நாடுகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி தர நம் வீரர்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE