புதுடில்லி:வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக பாரதிய கிசான் சங்கத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான புபிந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை எதிர்த்தும் சட்டங்களை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.இந்த நிலையில் பாரதிய கிசான் சங்கத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான புபிந்தர் சிங் மான் பெயரில் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: நான் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்பேன். அதனால் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE