உலக சுகாதார அமைப்பு சீனாவின் வூஹான் நகருக்கு வருகை தருவதாக முன்னதாக அறிவித்து இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எவ்வாறு வூஹான் பரிசோதனைக் கூடத்தில் இருந்து உலகுக்குப் பரவியது என்று விசாரணை மேற்கொள்ள இந்த குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 15 பேர்கொண்ட இந்த குழுவில் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வூஹானுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வூஹான் நகரில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவியது. வூஹான் பரிசோதனைக் கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தவறுதலாக வெளியே கசிந்த வவ்வால் இறகு சாம்பிள் ஒன்று, அருகில் இருந்த இறைச்சி மார்க்கெட்டில் இரண்டரக் கலந்து அதனை சீனர்கள் சாப்பிட்டு வைரஸ் பரவியதாக சீன அரசு கடந்த ஒரு ஆண்டாக காரணம் கூறி வந்தது.
ஆனால் சீனா திட்டமிட்டு வைரஸை பரப்பியதாக கடந்த ஆண்டு அமெரிக்க டிரம்ப் அரசு குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவும் இந்த குற்றச்சாட்டை ஆமோதித்து இருந்தது. உலக பொருளாதாரத்தை முடக்குவதற்காக சீனா இவ்வாறு செய்கிறது என்று கூறப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இதுதொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக உலக சுகாதார அமைப்பு வூஹான் பரிசோதனை கூடத்தில் இருந்து வைரஸ் எவ்வாறு பரவியது என்று சோதனை மேற்கொள்ள பல நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு குழுவினர் வூஹான் செல்ல இருப்பதாக அறிவித்தனர்.
ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். வூஹான் செல்ல இருக்கும் 15 உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானிகளுக்கு முன்னதாக சிங்கப்பூரில் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அனைவருக்குமே வைரஸ் தாக்கம் இல்லை என்று முடிவு வந்தது. இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியூக்ளிக் ஆசிட் பரிசோதனை மூலம் இந்த முடிவு தெரிய வந்தது.

ஆனால் இறுதியில் 2 விஞ்ஞானிகளுக்கு வைரஸ் தாக்கம் உள்ளதாக முடிவுகள் வந்தன. இதனையடுத்து அவர்களது சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 13 விஞ்ஞானிகள் தனிவிமானம் மூலமாக சீனா வந்தடைந்தனர். இவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் இருக்க சீன கம்யூனிச அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு இவர்களுக்கு வைரஸ் தாக்கம் இல்லை என்று நிரூபணம் ஆன பின்னரே சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE