பொது செய்தி

இந்தியா

'வாட்ஸ் ஆப்' கொள்கை மத்திய அரசு ஆய்வு

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :பயனாளிகளின் தகவல்களை பரிமாறும் வகையில் 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு எனப்படும் 'பிரைவசி' கொள்கை மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொள்கை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த 'பேஸ்புக்' சமூக வலை தளம் நிறுவனத்தின் துணை அமைப்பான 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளம்
வாட்ஸ் ஆப்,  கொள்கை, மத்திய அரசு

புதுடில்லி :பயனாளிகளின் தகவல்களை பரிமாறும் வகையில் 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு எனப்படும் 'பிரைவசி' கொள்கை மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொள்கை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 'பேஸ்புக்' சமூக வலை தளம் நிறுவனத்தின் துணை அமைப்பான 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளம் சமீபத்தில் தனது பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.அதன்படி 'தனது சேவையைப் பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 8ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாற்று சமூக வலை தளங்களை மக்கள் நாடி வருகின்றனர்.இதையடுத்து புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்தது.

நம் நாட்டில் வாட்ஸ்ஆப் சமூக வலை தளத்தை 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அந்த நிறுவனத்தின் புதிய கொள்கையால் ஏற்பட உள்ள தாக்கம் குறித்து மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Ayyappan - chennai,இந்தியா
17-ஜன-202113:45:54 IST Report Abuse
C.Ayyappan namasthe barath பயன்படுத்திட்டு போறோம்.
Rate this:
Cancel
15-ஜன-202111:55:10 IST Report Abuse
சம்பத் குமார் 1). எல்லா வெளிநாடுகளிலும் IT fieldல் நமது இந்தியர்களே அதிகம் உள்ளனர்.2). எல்லா திறமைகளும் நம்மிடம் உள்ளன.3). இந்த தொழில் பல மில்லியன் டாலர் வருமானம் வருகிறது.3). நாம் GSTல் வசூலிக்கும் வருமானத்தை விட பலமடங்கு அதிக வருமானம் உள்ளது.4). சீனா அரசாங்கம் இதை கருத்தில் கொண்டுதான் சொந்தமாக browser மற்றும் அதன் துணை சார்ந்த துறைகளில் ஈடுபடுகிறது.5). நம் அரசாங்கம் ஏன் நம் இந்தியாவுக்கு என்று ஒரு browser and allied products உருவாக்ககூடாது. நாம் நினைத்தால் ஆறு மாதங்களில் உருவாக்கி ஒரு வருடத்திற்குள் நடைமுறை படுத்தி விடலாம்.6). கண்முன்னே நமது பில்லியன் டாலர் பணம் வெளிநாட்டிற்கு எளிதாக செல்கிறது.7). அதை உபயோகித்து நமக்கு அவர்கள் எஜமானர்களாக உள்ளார்கள். நன்றி ஐயா.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
15-ஜன-202103:01:27 IST Report Abuse
கும்புடுறேன் சாமி வாட்ஸ் அப் இல்லைன்னா நாம் தமிழர் கட்சி அழிஞ்சுரும் , சிங்கள அரசுடன் கைகோர்த்த வாட்சப்பை பழிவாங்குவோம் காத்திரு பகையே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X