பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் பொங்கலோ பொங்கல்!

Added : ஜன 15, 2021
Share
Advertisement
பேரூர்:தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீத்திபாளையம், மாதம்பட்டி, கரடிமடை, சென்னனுார், தொம்பிலிபாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நேற்று பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டப்பட்டது.கிராமத்து இளைஞர்கள் இணைந்து, பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளை நடத்தினர். குறிப்பாக, கபடி, வாலிபால், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம் போட்டிகளில்
 கிராமங்களில் பொங்கலோ பொங்கல்!

பேரூர்:தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீத்திபாளையம், மாதம்பட்டி, கரடிமடை, சென்னனுார், தொம்பிலிபாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நேற்று பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டப்பட்டது.கிராமத்து இளைஞர்கள் இணைந்து, பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
குறிப்பாக, கபடி, வாலிபால், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம் போட்டிகளில் இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.கரடிமடையில் சாம்பியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், நடந்த வாலிபால் போட்டியில், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 26 அணிகள் பங்கேற்றன. சென்னனுாரில் மக்கள் பொதுநல சங்கத்தினர் பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கான போட்டிகளை நடத்தினர்.மாதம்பட்டியில் இளைஞர் குழுவினர் போட்டிகளை நடத்தினர். சாரல் மழை பெய்த போதும், கிராம மக்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று, பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X