பொது செய்தி

தமிழ்நாடு

967 பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் வந்தது தகவல் 

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், இடைநிற்றல் தழுவி, பள்ளி செல்லாத 967 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அருகாமை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் கண்டறியப்படுவோர், உண்டு உறைவிட பள்ளி, முறைசார் பள்ளிகளில் சேர்த்து, பிளஸ் 2 முடிக்கும் வரை கண்காணிக்கப்படுவர்.கொரோனா தொற்று காரணமாக, இக்கணக் கெடுப்பு கடந்த

கோவை:கோவை மாவட்டத்தில், இடைநிற்றல் தழுவி, பள்ளி செல்லாத 967 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அருகாமை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் கண்டறியப்படுவோர், உண்டு உறைவிட பள்ளி, முறைசார் பள்ளிகளில் சேர்த்து, பிளஸ் 2 முடிக்கும் வரை கண்காணிக்கப்படுவர்.கொரோனா தொற்று காரணமாக, இக்கணக் கெடுப்பு கடந்த நவ., மாதம் துவங்கி, டிச. 31 ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 967 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள், அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, அரசின் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.கோவையில் அதிக பட்சமாக எஸ்.எஸ்.குளம், வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் இருந்து, 300க் கும் மேற்பட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 80 பேர் பள்ளி செல்லாமல்இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இப்பட்டியலில் இடம் பெற்றோர் எண்ணிக்கை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X