எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மதுரைக்கு என்ன குறைச்சல் மெட்ரோ ரயில் ஓட...

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மதுரை புறக்கணிக்கப்படுவதால் இன்னும் 'பெரிய கிராமமாகவே' உள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களின் எண்ணிக்கை, குறுகலான சாலைகள் போக்குவரத்து நெரிசலை மேலும் மேலும் அதிகரிக்க செய்கின்றன.விமானம், ரயில் போக்குவரத்தை பொறுத்தவரையில் வடமாநிலநகரங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை பின்
மதுரை, எய்ம்ஸ், மெட்ரோ ரயில், தேவை, போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மதுரை புறக்கணிக்கப்படுவதால் இன்னும் 'பெரிய கிராமமாகவே' உள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களின் எண்ணிக்கை, குறுகலான சாலைகள் போக்குவரத்து நெரிசலை மேலும் மேலும் அதிகரிக்க செய்கின்றன.

விமானம், ரயில் போக்குவரத்தை பொறுத்தவரையில் வடமாநிலநகரங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை பின் தங்கியே உள்ளது. மீனாட்சிஅம்மன் கோயிலை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்ட மதுரையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

சமீபத்தில் நாட்டில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டில்லியில் கொடியசைத்து துவக்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் விடப்பட்டது. 2014ல் பா.ஜ., அரசு அமைந்த போது நாட்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தன. தற்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025 க்குள் இதை 25 நகரங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளோம்,'' என்றார்.

இந்த வாய்ப்பை நழுவ விடாமல் மக்கள் பிரதிநிதிகள் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, மெட்ரோ ரயில் திட்டத்தை பெற முயற்சிக்க வேண்டும். மதுரையில் உயர்நீதிமன்றம் கிளை, அதிநவீன அரசு மருத்துவமனை, ஐ.டி., பூங்காக்கள் அமைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளது.

எதிர் காலத்தில் அதிகரிக்கவுள்ள நெரிசலை சமாளிக்க ஏதுவாக, கோவையில் அமைவது போல மதுரைக்கும் மெட்ரோ ரயில் கட்டாயம் தேவை.இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்ததாவது...


காலத்தின் கட்டாயம்என்.ஜெகதீசன், தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க தலைவர்:

சென்னைக்கு அடுத்தபடியாக 1974 ல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நுாறுவார்டுகளாக தெற்கில் திருமங்கலம் முதல் வடக்கில் மேலுார் வரை விரிவடைந்து வருகிறது. புராதன சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து சதுர வடிவில்கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப நெரிசலும் அதிகரித்துள்ளது. நகரில் தினமும் 500 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ரோட்டிற்கு வருகின்றன.

நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரயில் காலத்தின் கட்டாயம்.பத்து லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக இருக்கும் நகரங்களில் மாநில அரசு ஐம்பது சதவீத பங்களிப்பை தந்து பரிந்துரைத்தால் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து விட்டது. எனவே மாநில அரசு உடனடியாக தன் பங்களிப்பை அளித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். தற்போது கூட பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களில் விரிவுப்படுத்தப்படும் என அறிவித்தை மாநில அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

திருப்புவனம்-செக்கானுாரணி, மேலுார்-திருமங்கலம் என உயர்நீதிமன்றம், மாட்டுத்தாவணி, விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, கரடிக்கல், நாகமலை புதுக்கோட்டை வழியாக மெட்ரோ ரயில் வழித்தடத்தை கட்டமைக்கலாம். மாநில அரசு தாமதிக்காமல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.


மதுரைக்கு மெட்ரோ அவசியம்பூர்ணிமா வெங்கடேஷ், யங் இந்தியன்ஸ் தலைவர் : மதுரையில் பெரும்பாலான ரோடுகள் குறுகலாக இருப்பதால் பெரிய ரோடுகளில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம். குறிப்பாக விமான நிலையம் முதல் மதுரை நகர் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ அவசியம் வேண்டும். இதனால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

காரில் செல்லும் பலர் மெட்ரோ பயன் படுத்த துவங்கும் நிலையில் மதுரையின் ஒலி, காற்று மாசு குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு செல்லும் நேரம் குறைவதால் வேலைகள், சேவைகளை குறித்த நேரத்தில் முடிக்கலாம். மதுரையை இரண்டாம் தலைநராக்க கேட்கும் சூழலில் மெட்ரோ சேவையும் வர வேண்டும். அப்படி வந்தால் மதுரையின் தொழில், பொருளாதார வளங்கள் பெருகும்.


நெரிசலுக்கு நிரந்தர தீர்வுமோகன், நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் : மதுரையில் மாசி, மாரட், வெளி வீதிகளில் எல்லா நாட்களிலும் வாகனங்களில் எளிதில் சென்று வருவது சிரமம். குறிப்பாக முகூர்த்த, திருவிழா காலங்களில் கேட்கவே வேண்டாம்.அந்தளவுக்கு நகரில் குறுகலாக அமைந்த ரோடுகள், அதிகரித்துள்ள வாகனங்கள், தரமற்ற ரோடுகளால் நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மெட்ரோ ரயில் சேவையை துவக்க வேண்டும்.

இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என பல்வேறு பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். நகரில் உயர்மட்ட பாலங்கள் சாத்தியம் தானா என ஒரு காலத்தில் கேள்வி எழுந்தது. ஆனால் காளவாசல், புது நத்தம் ரோடு உள்ளிட்ட பல உயர்மட்ட பாலங்கள் நகரில் அமைக்கப்படுகின்றன.

மேலும் கோரிப்பாளையம் சந்திப்பு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் சிம்மக்கல் வரை உயர்மட்ட பாலங்கள் அமையவுள்ளன. அதுபோல நகரில் முக்கிய இடங்களை இணைப்பதாகவும், நகரை சுற்றிலும் முக்கிய ஊர்களை இணைப்பதாகவும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இனியும் தாமதித்தால் நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர வேறுவழியில்லை.


தொலைநோக்கு பார்வை தேவை
மலைச்சாமி, ராயல்கார்டன் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர்: மாட்டுதாவணியிலிருந்து சாதாரணமான நாட்களில் திருப்பரங்குன்றத்திற்கு அரசு டவுன்பஸ்சில் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. திருவிழா நாட்களில் கேட்கவே வேண்டாம். கோரிப்பாளையம், காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிம்மக்கல் பகுதிகளை கடந்து செல்ல குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகிறது.

தற்போது வைகை கரைகளில் அமைக்கப்பட்ட ரோடுகளால் அதையொட்டிய பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடிகிறது. அதுபோல மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தினால் நெரிசலை தவிர்க்க முடியும். தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டத்தை இப்போதே துவங்கினால் தான் இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிட முடியும்.அப்போதைய வாகனங்களின் எண்ணிக்கையால் ஏற்படும் நெரிசலையும் சமாளிக்க முடியும்.

மாநில அரசு ஐம்பது சதவீத பங்களிப்பை வழங்கி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
16-ஜன-202116:22:59 IST Report Abuse
jay உள்நோக்கோடு எழுதப்பட்டுள்ளத்து இந்த செய்தி
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
16-ஜன-202100:21:37 IST Report Abuse
Arul Narayanan Coimbatore has expanded in few directions only towards Ooty, Sathy (both adjacent), Palladam, Avinasi (both adjacent) and Pollachi and spread over long distances. So Metro may be convenient. But Madurai is expanded in multi directions densely towards Avaniyapuram(airport), Thiruparankundram, Chekkanurani, Samayanallur, Alanganallur, Aanaiyur, Umaichikulam, Kadachanhal, Agricultural University, Karuppayurani and Thiruppuvanam. Expansion is found in every direction for a limited distance only. Here two circular routes in the shape of. no. 8 both crossing at the centre, totally underground may be possible. But getting land even for building stations is hard and income also a question mark. Wish for any positive approach.
Rate this:
Cancel
Srinivasan - Madurai ,இந்தியா
15-ஜன-202123:36:05 IST Report Abuse
Srinivasan திண்டுக்கல் டூ விருதுநகர் ஒரு தடமாகவும் மற்றும் சிவகங்கை டூ உசிலம்பட்டி (வைகைக் கரையை ஒட்டி) ஒரு தடமாகவும் அமையப்பெற்றால் மதுரை மிகப்பெரிய வளர்ச்சி அடையும், மிக குறைந்த கட்டணத்தில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X