ஸ்பெயினில் இருந்து வந்தவர் டிஸ்சார்ஜ்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்பெயினில் இருந்து வந்தவர் டிஸ்சார்ஜ்!

Added : ஜன 15, 2021
Share
கோவை: கோவை, சிங்காநல்லுார் உப்பிலி பாளையத்தை சேர்ந்த 30 வயது இளைஞர், ஸ்பெயின் நாட்டில் சரக்கு கப்பலில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி, இங்கிலாந்து வழியாக கோவை வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனை, தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர்,
 ஸ்பெயினில் இருந்து வந்தவர் டிஸ்சார்ஜ்!

கோவை: கோவை, சிங்காநல்லுார் உப்பிலி பாளையத்தை சேர்ந்த 30 வயது இளைஞர், ஸ்பெயின் நாட்டில் சரக்கு கப்பலில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி, இங்கிலாந்து வழியாக கோவை வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனை, தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 14 நாட்கள் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரதுறையினர் தெரிவித்தனர்.வேளாண் பல்கலை பயிற்சிகோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பயிர் நோயியல் துறையில், காளான் உற்பத்தி மற்றும் மதிப்பூட்டுதல் பயிற்சி, காரமடை வட்டாரத்திலுள்ள பட்டியலின மகளிருக்கு வழங்கப்பட்டது. பயிர் நோயியல் துறை தலைவர் கார்த்திகேயன், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர் பயிற்சி அளித்தனர்.சட்ட நகலை எரித்த விவசாயிகள்கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக, பேரூர், நரசீ புரம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை எரித்து, போகி கொண்டாட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதை தொடர்ந்து கோவை மாவட்டத்தை சுற்றி உள்ள கிராமங்களில், வேளாண் சட்ட நகலை எரித்து, அமைதியான முறையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.சமத்துவ பொங்கல் விழா!கோவை: கோவை அரசு மருத்துவமனையில், டீன் காளிதாஸ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில், வண்ண கோலமிட்டு, கரும்புகள் மற்றும் பொங்கல் வைத்து கொண்டாடினர். கொரோனா காலம் என்பதால், விழாவில் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர். இதில், ஆர்.எம்.ஓ., டாக்டர்கள், நர்ஸ்கள், நர்ஸிங் மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தயாராகும் தடுப்பூசி வார்டு!கோவை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைகள் உள்பட, 10 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட வருவோரின் விபரங்கள் சரி பார்க்கும் அறை, தடுப்பூசி அறை, அப்சர்வேசன் அறை என அனைத்து பிரிவுகளும் மும்முரமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.எந்த பிரச்னையும் இல்லை!கோவை: கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்கென, கடந்தாண்டு டிச.,25ம் தேதி, சிறப்பு புற நோயாளிகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. தினமும் 5 முதல் 10 பேர் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனினும், அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு, யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என டீன் நிர்மலா தெரிவித்தார்.சரிந்தது டவர்; கலெக்டரிடம் புகார்கோவை: வேலாண்டிபாளையம் மருதக் கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மேற் பகுதியில், மொபைல் போன் டவர் அமைக்கும் பணி, கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. கட்டுமானப்பணியில் ஏற்பட்ட குளறுபடியால் சரிந்து விழுந்தது. அருகிலுள்ள வீடுகளின் மின் இணைப்பு மற்றும் டிவி., பிரிஜ் பழுதானதாக கூறப்படுகிறது. அதற்கு நிவாரணம் கேட்டு, அப்பகுதி மக்கள் கலெக்டர் ராஜாமணியிடம் புகார் கொடுத்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், டவர் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.மது விலக்கு வாகனங்கள் ஏலம் கோவை: கோவை மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாரால், மது கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட கார், பைக், ஆட்டோ உட்பட ஏழு வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகிறது. ராம நாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், வரும் 20ம் தேதி, காலை 11:00 மணிக்கு ஏலம் நடைபெறும். வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்புவோர், முன்கூட்டி பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. ஏலம் எடுத்தவுடன், அதற்கான முழுத்தொகை செலுத்திய பிறகு வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X