பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தவரின் ரேஷன் கார்டில் பொங்கல் பரிசு தொகை 'லபக்'

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கோவை:கடந்த, டிச., மாதம் இறந்த, 80 வயது முதியவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி, கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் பெறப்பட்டுள்ளது.கோவை, ராமநாதபுரம், பி.ஆர்.நகரில் வசித்து வந்த, 80 வயதான நாராயணசாமி, டிச., 4ல் இறந்தார். தனலட்சுமிபுரம் கடையில் பொருட்கள் வாங்கி வந்தார். அவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை காலமானது தொடர்பாக, ரேஷன் கடைக்கு தகவல் தெரிவித்து, கார்டு

கோவை:கடந்த, டிச., மாதம் இறந்த, 80 வயது முதியவரின் ரேஷன் கார்டை பயன்படுத்தி, கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் பெறப்பட்டுள்ளது.கோவை, ராமநாதபுரம், பி.ஆர்.நகரில் வசித்து வந்த, 80 வயதான நாராயணசாமி, டிச., 4ல் இறந்தார். தனலட்சுமிபுரம் கடையில் பொருட்கள் வாங்கி வந்தார். அவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை காலமானது தொடர்பாக, ரேஷன் கடைக்கு தகவல் தெரிவித்து, கார்டு 'சரண்டர்' செய்யப் போவதாக கூறியுள்ளார்.இச்சூழலில், டிச., 30ல் ரேஷன் கார்டு எண்ணை பயன் படுத்தி, ரேஷன் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாராயணசாமி பயன்படுத்தி வந்த மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.அவரது மகன், ரேஷன் கடைக்கு மீண்டும் சென்று, 'எனது தந்தை இறந்து விட்டார்; அவரது கார்டை பயன்படுத்தி, வேறு நபருக்கு பொருள் வழங்க வேண்டாம்' என, கூறியுள்ளார். ஆதார் அடையாள அட்டையின், 'பயோமெட்ரிக்' பதிவையும் 'லாக்' செய்துள்ளார்.இச்சூழலில் அவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன், கலெக்டரிடம் மின்னஞ்சலில் புகார் செய்தார்.மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசனிடம் கேட்டபோது, ''இதுவரை புகார் வரவில்லை; நீங்கள் கூறிய புகாரை, தாசில்தாருக்கு அனுப்பியுள்ளேன். மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்பின், விசாரித்து நடவடிக்கை எடுத்துவிட்டுச் சொல்கிறேன்,'' என்றார்.எல்லோரும் இப்படி வாங்கி முடித்த பின், பேஷா சொல்லுங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X