பொது செய்தி

தமிழ்நாடு

கும்மியடியுடன் பொங்கல் விழா

Added : ஜன 15, 2021
Share
Advertisement
பாப்பம்பட்டி: பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.டி. காலனி பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி, கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பெண்கள் கும்மியாட்டமாடியும், ஆண்கள் உரியடித்தும், குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும், கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளிகள் திறக்கவுள்ள சூழலில்,
 கும்மியடியுடன் பொங்கல் விழா

பாப்பம்பட்டி: பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.டி. காலனி பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி, கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பெண்கள் கும்மியாட்டமாடியும், ஆண்கள் உரியடித்தும், குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும், கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளிகள் திறக்கவுள்ள சூழலில், அப்பகுதி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாஅரசூர்: அரசூர், மாரியம்மன் கோவில் திடலில் நேற்று, கிராம மக்கள் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின், 6 முதல், 60 வயது வரையிலான ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒயிலாட்டம், கரகாட்டம், களியலாட்டம், தவில் நாதஸ்வரம், மாடு மயிலாட்டம், நெருப்பு நடனம் உள்ளிட்ட கலை பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தடுப்பூசிக்கு தயார்!கோவை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, கோவையில் அரசு மருத்துவமனைகள் உள்பட, 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மருந்துகளை பதப்படுத்துவதற்கு தேவையான, ஐ.எல்.ஆர்.,ரெப்ரிஜிரேட்டர் எனப்படும் குளிர்பதன சாதனம், நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X