திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி, 'பெண் அலங்கரித்த கூந்தலுடன் பொங்கலிட்டு சூரியனை வழிபாடும் காட்சி'யை, ரங்கோலி வரைந்து அசத்தினார்.அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி தீக் ஷனா, பொங்கல் திருநாளையொட்டி, 'பெண் ஒருவர் அலங்கரித்த கூந்தலுடன் பொங்கலிட்டு சூரியனை வழிபாடும் காட்சி'யை, ரங்கோலி வரைந்து அசத்தினார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பண்டிகை நாட்களில் மட்டுமே பல மணிநேரம் செலவிட்டு, கோலமிடப்படுகிறது. கோலம் போடுவதால் பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது.கோலம் கலையை மறந்து விடாமல் இருக்கவும் கோலம் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பள்ளிகளில் போட்டி நடத்தப்படுகிறது. இன்றைய சூழலில் பெண்கள் கோலம் போடுவதை மறந்து வருகின்றனர். நம் பாரம்பரிய கலையான கோலம் போடும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE