பொது செய்தி

தமிழ்நாடு

மும்மதத்தினர் பங்கேற்ற மத நல்லிணக்க பொங்கல்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:ம.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில், மும்மதத்தினர் இணைந்து பொங்கல் வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.திருப்பூர், சாமுண்டிபுரம், நாகாத்தம்மன் கோவில் அருகில், ம.தி.மு.க., மற்றும் தீலிபன் மன்றம் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்
 மும்மதத்தினர் பங்கேற்ற மத நல்லிணக்க பொங்கல்

திருப்பூர்:ம.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில், மும்மதத்தினர் இணைந்து பொங்கல் வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.திருப்பூர், சாமுண்டிபுரம், நாகாத்தம்மன் கோவில் அருகில், ம.தி.மு.க., மற்றும் தீலிபன் மன்றம் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் வந்தியதேவன், மாவட்ட செயலாளர் சிவபாலன் முன்னிலை வகித்தார்.ஹிந்து, இஸ்ஸாமியர், கிறிஸ்துவர் என மும்மதத்தினரும் தங்கள் வீடுகள் முன் புதிய பானையில் பொங்கல் வைத்தனர். அப்பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உற்சாகத்துடன் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, பெயர் பதிவு செய்தவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். சாமுண்டிபுரம் சிவா - விமலா தம்பதி முதல்பரிசு பெற்றனர். இவர்களுக்கு மாநகர அவைத்தலைவர் நாகராஜ் பீரோ பரிசளித்தார். இதேபோல், குலுக்கல் முறையில், 101 தம்பதியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.பா.ஜ., சார்பில் விழாதிருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., 45வது வார்டு சார்பில், 'நம்ம ஊர் தாமரை பொங்கல் விழா' திருப்பூர் செல்லப்ப புரத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் மலர்க்கொடி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.மண்டல மகளிர் அணி துணை தலைவர் சந்திரா, சிவானந்தம் முன்னிலை வகித்தனர். தெற்கு தொகுதி பொறுப்பாளர் நடராஜ், மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகள் அனைவரும் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். விழா நிறைவாக பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.மகளிர் குழுவினர்திருப்பூர் மாநகராட்சி, 48வது வார்டு சூசையாபுரத்தில், 15 மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், நகர வங்கி தலைவர் சடையப்பன் பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.சூசையாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பு தலைவர் கீதா தலைமையில், 15 குழுக்களை சேர்ந்த, 151 பெண்கள் பொங்கல் வைத்தனர். சர்க்கரை பொங்கல் வைத்ததும், அருகே உள்ள செல்வ சக்தி விநாயகர் கோவிலில் வைத்து, கூட்டு வழிபாடு நடத்தினர். கடந்த, 11 மாதங்களாக களையிழந்து போன திருப்பூர் நகரம், பொங்கல் பண்டிகையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக, பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X