திருப்பூர்:போலியோ சொட்டு மருந்து வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.வலிமையான கண்காணிப்பு, தீவிர தடுப்பு மருந்துத் திட்டம், இலக்குடன் கூடிய சமூகத் திரட்டல் முயற்சி போன்றவற்றால், இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. கடந்த, 2014, மார்ச், 27 ல், 'போலியோ இல்லை' எனும் சான்றிதழை, உலக சுகாதார நிறுவனம் வாயிலாக இந்தியா பெற்றுள்ளது.இருப்பினும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து, தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு முகாம், வரும் 17ல் துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், நாளை, (16ம் தேதி), நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளதால், போலியோ சொட்டு மருந்து முகாம், 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'நோய் பாதிப்பு இல்லை என்பதால், 2019ம் ஆண்டு முதல், ஒரே தவணையாக சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி பணியால், வரும் 31ம் தேதி சொட்டுமருந்து முகாம் நடக்கிறது.' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE