திருப்பூர் மாநராட்சி, 60வது வார்டுக்கு உட்பட்ட ஆண்டிபாளையத்தில் சாக்கடை கால்வாய் வசதியில்லாமல், கழிவு நீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம்.வாகன ஓட்டிகள் சிரமம்1. திருப்பூர், தாராபுரம் ரோடு - தில்லை நகரில் ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.- பிரகாஷ், தில்லை நகர்.2. திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி அருகே கால்வாய் பணி முடிந்தும், அங்கு இருந்த மண் அகற்றாத காரணத்தால், மழை பெய்து சேறும், சகதியுமாக மாறி விட்டது.- வாசன், ராயபுரம்.விபத்து அபாயம்திருப்பூர், தாராபுரம் ரோட்டில், கோவில் வழியில் தெருவிளக்கு கம்பம் நடப்பட்டும், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.- கலையரசி, கே.செட்டிபாளையம்.பயணிகளுக்கு கஷ்டம்திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் வசதியில்லாத காரணத்தால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.- அருணா, வீரபாண்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE