திருப்பூர்:பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.வேளாண்மைக்கு முக்கியமான சூரிய பகவானை வழிபடும் விதமாக தை முதல் நாளில் தைப் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும்.வேளாண்மை தொழிலில் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவை கால் நடைகள். அவ்வகையில் தங்கள் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் உதவும் கால்நடைகளைசிறப்பித்து வழிபாடு செய்யும் விதமாக, மாட்டுப் பொங்கல் இன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரால் கொண்டாடப்படுகிறது.அவ்வகையில், கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவிவர்ணம் பூசி தயார்படுத்தப்படும். திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் நேற்று இப்பணியில் ஈடுபட்டனர்.மாட்டுப் பொங்கலின் போது மாடுகளுக்கு பூ மாலை அணிவித்து, பொட்டு வைத்து அலங்கரித்தும், மூக்கணாங் கயிறு உள்ளிட்ட கயிறுகள் புதிதாக மாற்றிக் கட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.தோட்டங்களில், மாடுகளின் முன் படையல் வைத்து, குடும்பத்தாருடன் வழிபாடு நடத்துவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE