பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக கட்டப்படும் பயணிகள் நிழற்கூரை

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வகுத்தம்பாளையத்தில், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணிகள் நிழற்கூரை கட்டும் பணி துவங்கியுள்ளது.கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வகுத்தம்பாளையம் ரோட்டில் உள்ள பஸ்ஸ்டாப்பில், பழுதடைந்த பயணிகள் நிழற்கூரை கட்டடம் இருந்தது. இதில், பயணிகள் உள்ளே அமராமல் வெளியே உள்ள மரத்தடியில் நின்று பஸ் ஏறி வந்தனர்.
 புதிதாக கட்டப்படும் பயணிகள் நிழற்கூரை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வகுத்தம்பாளையத்தில், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணிகள் நிழற்கூரை கட்டும் பணி துவங்கியுள்ளது.கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வகுத்தம்பாளையம் ரோட்டில் உள்ள பஸ்ஸ்டாப்பில், பழுதடைந்த பயணிகள் நிழற்கூரை கட்டடம் இருந்தது. இதில், பயணிகள் உள்ளே அமராமல் வெளியே உள்ள மரத்தடியில் நின்று பஸ் ஏறி வந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, பயணிகள் நிழற்கூரை கட்டடம் இடிக்கப்பட்டது.அதன் பின், ஒரு ஆண்டாக நிழற்கூரை கட்டப்படவில்லை. இதுகுறித்தும் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் புதிதாக பயணிகள் நிழற்கூரை கட்டடம் கட்டும் பணி துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஊராட்சி தலைவர் அன்பழகன் கூறுகையில், ''நிழற்கூரை கட்டடத்துக்கு மேற்கூரையில் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிமென்ட் பூச்சு பணியும், டைல்ஸ் ஒட்டும் பணியும் விரைவில் துவங்கயுள்ளது. இப்பணி வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X