பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்கம்; 'சைடு' ஒதுங்கினால் அவ்ளோதான்! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை - உடுமலை ரோடு விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் குழி தோண்டி, 'ரிப்ளக்டர்கள்' வைக்காமல் மெத்தனமாக உள்ளதால், மூன்று நாட்களில் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், டாப்சிலிப் பகுதிகளுக்கு, ஆனைமலை - உடுமலை ரோட்டை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகளவில் வாகனத்தில் வந்து செல்கின்றனர். மக்கள், விவசாயிகள், என
 சாலை விரிவாக்கம்; 'சைடு' ஒதுங்கினால் அவ்ளோதான்! நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்

ஆனைமலை:ஆனைமலை - உடுமலை ரோடு விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் குழி தோண்டி, 'ரிப்ளக்டர்கள்' வைக்காமல் மெத்தனமாக உள்ளதால், மூன்று நாட்களில் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், டாப்சிலிப் பகுதிகளுக்கு, ஆனைமலை - உடுமலை ரோட்டை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகளவில் வாகனத்தில் வந்து செல்கின்றனர். மக்கள், விவசாயிகள், என பலரும், உடுமலை ரோட்டை பயன்படுத்துவதால், எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த, 20 நாட்களாக, ஆனைமலை முக்கோணம் பகுதியில் இருந்து இந்திரா நகர், மற்றும் தென்சங்கம்பாளையம் பகுதியில் இருந்து, மஞ்சநாயக்கனுார் வரை, ஆறு கி.மீ.,க்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. 5.5 மீ., அகலமாக இருந்த ரோடு, 7 மீ.,க்கு விரிவுபடுத்துவதற்காக ரோட்டோரங்களில், 2.5 அடி முதல், 3.5 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளன.இந்திரா நகரில் குடிநீர் குழாய் உடைந்ததால், சில இடங்களில், நான்கு அடி ஆழத்துக்கும் மேல் குழி தோண்டப்பட்டுள்ளன. ரோட்டோரத்தில் குழி உள்ளதை தெரியப்படுத்த, ஒளிப்பிரதிபலிப்பான் (ரிப்ளக்டர்), மணல் மூட்டைகளை, நெடுஞ்சாலைத்துறையினர் வைக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், வாகன ஓட்டுனர்களுக்கு இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாததால், விபத்துக்கள் ஏற்படுகின்றன.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இந்திரா நகர் பகுதியில், குழியில் பைக் விழுந்தது. நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில், சுற்றுலா வாகனம் குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த வாகனத்தில் பயணிகள் இல்லாததால், பெரும் அசம்வாவிதம் தவிர்க்கப்பட்டது.ஒளிப்பிரதிபலிப்பான், மணல் மூட்டைகள் மற்றும் தடுப்பு வைக்க வலியுறுத்தி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், நெடுஞ்சாலைத்துறையினர் செவிமடுக்காமல், மெத்தனமாக உள்ளனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கவுசல்யாவிடம் கேட்டபோது, 'இந்திரா நகர் அருகே, மூட்டைகள் வைந்திருந்தோம். குழாய் உடைப்பை சரிசெய்ய வந்த, ஊராட்சி பணியாளர்கள் அவற்றை அகற்றியுள்ளனர். தென்சங்கம்பாளையம் பகுதியில் உடனடியாக 'ரிப்ளக்டர்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி, போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X