பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 15, 1981திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில், 1902 பிப்., 7ம் தேதி பிறந்தவர், தேவநேயப் பாவாணர். இயற்பெயர், தேவநேசன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் உட்பட, 40-க்கும் மேற்பட்ட நுால்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ்,
 இதே நாளில் அன்று

ஜன., 15, 1981திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில், 1902 பிப்., 7ம் தேதி பிறந்தவர், தேவநேயப் பாவாணர். இயற்பெயர், தேவநேசன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் உட்பட, 40-க்கும் மேற்பட்ட நுால்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் உட்பட, 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றிருந்தார்.
கடந்த 1974-ல், தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.'உலகத்தின் முதல் மொழி தமிழ்' என்பதை, ஆதாரங்களுடன் விளக்கினார். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 1981 ஜன., 15ம் தேதி, தன் 79வது வயதில் இயற்கை எய்தினார். 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜன-202111:53:11 IST Report Abuse
Bhaskaran மொழி ஞாயிறு என்னும் பட்டத்துக்கு உரியவர் அன்னாருக்கு வாழும் காலத்தில் உரிய பெருமைகள் வழங்கப்படவில்லையென்று படித்துள்ளேன் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X