புதர் மண்டியுள்ள சுகாதார வளாகம்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கக்கடவு ஊராட்சியில், பெண்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக, மகளிர் சுகாதார வளாகம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.கடந்த, 2017 - 18ம் ஆண்டில், ஒரு லட்சத்து, 20 ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. ஆனால், சுகாதார வளாகம் பயன்படுத்ததால், மின் விளக்கு உடைந்துள்ளது.மேலும், சுகாதார வளாகத்தை சுற்றிலும் புதர்
 புதர் மண்டியுள்ள சுகாதார வளாகம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கக்கடவு ஊராட்சியில், பெண்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக, மகளிர் சுகாதார வளாகம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.கடந்த, 2017 - 18ம் ஆண்டில், ஒரு லட்சத்து, 20 ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. ஆனால், சுகாதார வளாகம் பயன்படுத்ததால், மின் விளக்கு உடைந்துள்ளது.மேலும், சுகாதார வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளது. இவ்வளாகத்துக்கு செல்வதற்கான வழித்தடமும் புதர்மண்டியதால், பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் உள்ளனர். இதனை பயன்படுத்துவதற்கு வசதியாக, ஊராட்சி நிர்வாகத்தினர் வளாகத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள புதரை அகற்றி, மின் விளக்கு பொருத்தி, வழித்தடத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X