உடுமலை:ராணுவப்பணியில் சேர்வதற்கு உதவி செய்வதாக கூறும், மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம், வரும் 18ம் தேதி முதல், 31 வரை நடக்கிறது. 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்துள்ள, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.'ஆன்லைன்' வழியாக பதிவு செய்தவர்கள், என்ற இணையதளத்தில், www.joinindianarmy.nic.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆட்சேர்ப்பு முகாம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். விண்ணப்பதாரர், உதவி செய்வதாக கூறும் மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம்.மேலும் விபரங்களுக்கு, கோவையில் உள்ள, 'ஆர்மி ரெக்ரூட்மென்ட்' அலுவலகத்தை, 0422 2222022 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE