பொது செய்தி

தமிழ்நாடு

'வான்' நின்று வாழ்த்த! களை கட்டிய மாட்டுப்பொங்கல்:இயற்கைக்கு நன்றி சொல்லும் விழா

Added : ஜன 15, 2021
Share
Advertisement
உடுமலை:உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்ல, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உற்சாகமாக பொங்கலிட்டு, வழிபட்ட மக்கள், இன்று மாட்டுப்பொங்கலுக்கு தயாராகி வருகின்றனர்.உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள், நேற்றுமுன்தினம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. வீடுகளில், வேப்பிலை, பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ

உடுமலை:உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்ல, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உற்சாகமாக பொங்கலிட்டு, வழிபட்ட மக்கள், இன்று மாட்டுப்பொங்கலுக்கு தயாராகி வருகின்றனர்.உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள், நேற்றுமுன்தினம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. வீடுகளில், வேப்பிலை, பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ வைத்து, காப்பு கட்டினர். தொடர்ந்து, நேற்று காலை, மண் பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு தோரணம் அமைத்து, பொங்கலிட்டனர். பின்னர், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி கூறி வழிபட்டனர்.ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் கைகொடுத்து, விவசாயம் செழிக்க வேண்டும் என, வழிபாடு நடத்தினர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், மழை இடைவெளி விட்ட போது, கொண்டாட்டங்களும், வழிபாடுகளும், கோலாகலமாக நடந்தது.அமராவதி ஆயக்கட்டு பகுதியில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களின் முன், பொங்கல் பானைகளை வைத்து, வணங்கினர். மார்கழி மாத இரவுகளில், கிராமங்களில் பழக்கப்படுத்தப்பட்ட சலகெருதுகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராமங்களில், ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.பார் போற்றும் பட்டி பொங்கல்உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப்பொங்கல், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. விளைநிலங்களில், மூங்கிலால் ஆன தடுப்புகளை கட்டி, மையப்பகுதியில், சிறிய தெப்பக்குளம் அமைத்து, அதில் நீர் நிரப்பி, மூலிகைச்செடிகள் மற்றும் கரும்பால் தோரணம் அமைப்பார்கள். காளை, கறவை மாடு, ஆடு ஆகியவற்றை, நீர்நிலைகளில், குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். அலங்கரிக்கப்பட்ட கால்நடைகளை பட்டி எனப்படும் பகுதியில் நிறுத்தி, பொங்கல் வைப்பார்கள். பின்னர், நாட்டுப்புற பாடல்களை பாடி, கால்நடைகளை வழிபட்டு, அவற்றுக்கு பொங்கல் ஊட்டுவர்.விளைநிலங்களில், நடத்தப்படும் இந்த பட்டிப்பொங்கல், பாரம்பரியமாக அனைத்து கிராமங்களிலும், கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்துக்காக, கிராமங்களில் நேற்றே பணிகள் தீவிரமாக நடந்தன. நிலத்தடி நீர் மட்டம், உயர இடைவிடாது பெய்து வரும் மழையால், வரும் பட்டங்களில், சாகுபடி செழிக்கும் என்ற நம்பிக்கையோடு, பொங்கல் வழிபாடு கிராமங்களில் களைகட்டியது.மேற்கூரைக்கு மாறிய விழாமடத்துக்குளம் பகுதியில் இந்த ஆண்டு பொங்கல் திறந்த வெளியிலிருந்து மேற்கூரைக்கு மாறியதோடு, மழையோடு இணைந்த வித்தியாசமானதாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.பொங்கல் பண்டிகை என்றாலே, திறந்தவெளியில் பொங்கல் வைத்து சூரியனை வணங்குதல், மாடுகளுடன் விளையாட்டு, பல போட்டிகள் நடத்துதல் என நடப்பது வழக்கம்.ஆனால், இந்த ஆண்டு தொடர்ந்து பெய்து வரும் மழையால், திறந்தவெளி தவிர்த்து, வீட்டின் வாசல் பகுதி, மேற்கூரை உள்ள இடங்களில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர். கால்நடைகளையும் இதே முறையில் அலங்கரித்து வணங்கினர்.பொங்கல் பண்டிகையின் போது இதுபோல் மழை பெய்தது இல்லை. இந்த ஆண்டு மழையோடு இணைந்த பொங்கலாக அமைந்துள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X