பொள்ளாச்சி:பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா கோவிலில் இன்று (15ம் தேதி) நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்க, சபரிமலை பிரதான தந்திரி வருகை தருகிறார்.குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. கொரோனா பரவல் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளால், இந்தாண்டு, சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை 'ரிப்போர்ட்' கொண்டு செல்வோரை, சபரிமலையில் மீண்டும் பரிசோதித்து அனுப்புகின்றனர். இதனால், சபரிமலை செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. சபரிமலை செல்ல இயலாத பக்தர்கள், இந்த பூஜையில் பங்கேற்று, ஐயப்பனை வழிபடுகின்றனர். இன்று காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை நடக்கும் சிறப்பு பூஜையில், சபரிமலை சன்னிதான பிரதான தந்திரி தாழமண் மடம் கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் முன்னாள் மேல்சாந்தி சசிநம்பூதிரி ஆகியோர் இந்த சிறப்பு பூஜையை நடத்துகின்றனர். குள்ளக்காபாளையம் சபரிமலை யாத்திரை குழு, தர்மசாஸ்தா சேவா டிரஸ்ட், ஐயப்ப இளைஞர் சேவா அணி, ஸ்ரீஹரிகந்த ஸ்ருதி பஜனைக்குழுவினர் சார்பில், சிறப்பு பூஜை நடக்கிறது. ஐயப்ப பக்தர்கள் பூஜையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE