பொது செய்தி

தமிழ்நாடு

இரு கரை தொட்டு செல்லும் அமராவதி: துணை ஆறுகளிலிருந்தும் நீர் வரத்து

Added : ஜன 15, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், துணை ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு, அணையிலிருந்து வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் நீர்
 இரு கரை தொட்டு செல்லும் அமராவதி: துணை ஆறுகளிலிருந்தும் நீர் வரத்து

உடுமலை;உடுமலை அமராவதி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், துணை ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு, அணையிலிருந்து வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான, பாலாறு, பொருந்தலாறு அணை நிரம்பி, வினாடிக்கு, 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, அமராவதி ஆற்றில் இணைந்து வருகிறது.அதே போல், குதிரையாறு அணையிலிருந்து, 600 கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டு, கொழுமம் அருகே ஆற்றில் கலந்தது.மேலும், பழநி அருகேயுள்ள வரதமாநதி அணையிலிருந்து, திறக்கப்பட்ட, 1,200 கன அடி நீரும் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், அமராவதி ஆற்றில், வினாடிக்கு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை நீர், இரு கரைகளையும் தொட்டு, காவிரியை நோக்கி சென்று கொண்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,' அமராவதி அணையிலிருந்தும், துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,' என்றனர்.அமராவதி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 88.92 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,949.08 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 6,618 கன அடி நீர் வரத்து நிலவியது. அணையிலிருந்து, 6,934 கன அடி நீர், பிரதான மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X