பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்கூட்டர் மானியம்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:ஸ்கூட்டர் மானிய திட்டத்தில், பட்டியலின பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக மானியத்தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெற்கு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின், ஸ்கூட்டர் மானியத் திட்டத்தில், நடப்பாண்டு பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட, 119 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 35 சதவீதம், அதாவது, 20

பொள்ளாச்சி:ஸ்கூட்டர் மானிய திட்டத்தில், பட்டியலின பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக மானியத்தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெற்கு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின், ஸ்கூட்டர் மானியத் திட்டத்தில், நடப்பாண்டு பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட, 119 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 35 சதவீதம், அதாவது, 20 பயனாளிகள் எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பட்டியலினத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவர். மற்ற, 99 பேர் பொதுப்பிரிவில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.இதில், பட்டியலின பெண்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்த, தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பித்தால், உடனடியாக மானியம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X