உடுமலை:உடுமலை பகுதிகளில், கடந்த, 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரில் பெய்யும் மழை வெள்ளநீர் வெளியேறும் வகையில், இயற்கையாக, தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் ஓடை என பல நீர் வழித்தடங்கள் உள்ளன. இவை, பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டும், தொடர்ந்து பராமரிக்காமல்,மண் மூடியும், புதர் மண்டியும் காணப்படுகிறது.இவ்வாறு, உடுமலை நகரின் மேற்கு பகுதிகளிலும், தாராபுரம் ரோடு பகுதிகளில் பெய்யும் மழை நீர், தாராபுரம் ரோடு வழியாக வந்து, கழுத்தறுத்தான் பள்ளம் வழியாக, உப்பாறு ஓடைக்கு செல்லும் வகையில், இயற்கையான நீர் வழித்தடம் அமைந்துள்ளது. தொடர்ந்து ஓடைகள் பராமரிக்கப்படாத நிலையில், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக மாறியும், ஓடை மாயமாகியுள்ளது.இதனால், மழை நீர் வெளியேற வழியில்லாமல், தாராபுரம் ரோடு, கருப்பராயன் கோவிலை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளில், மழை நீர் தேங்கியுள்ளது. சாக்கடை கழிவுகளும் சேர்ந்து, பல இடங்களில் தேங்கியுள்ளதால், துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகிறது. ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம்மடத்துக்குளம் பகுதிகளில், கடந்த பல தினங்களாக மழை பெய்து வருகிறது. தொழிலாளர்கள், சிறுதொழில் செய்வோர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE