அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மை பணி நடந்து வருகிறது.அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், சொக்கம்பாளையம், ஆணையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி ஆகிய ஊர்களில், அரசு மேல்நிலைப் பள்ளிகளும், அன்னுாரில் அரசு உதவிபெறும் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன.இத்துடன், பசூர், பொன்னே கவுண்டன் புதுார், பெரியபுத்துார் ஆகிய மூன்று ஊர்களில், அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்பது மாதங்களுக்கு பின், வரும், 19ம் தேதி முதல், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி செயல்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அன்னுார் வட்டாரத்தில், உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த இரு நாட்களாக துாய்மை பணி நடக்கிறது. பள்ளி மைதானத்தில் இருந்த புதர் அகற்றப்பட்டது. பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. குப்பையை அகற்றி, அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன.பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம். வரும்போது பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும். முகக்கவசம் அணிந்து வரவேண்டும். காலை, மாலை, சிறப்பு வகுப்பு கிடையாது, காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு பாதிப்பு உள்ளவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், கோவில்பாளையம், அத்திப்பாளையம், இடிகரை, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மை பணி நடந்து வருகிறது. மாணவர்கள் கடந்தாண்டு வழங்கப்பட்ட பஸ் பாசை பயன்படுத்தலாம் என, அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE