கோத்தகிரி:கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில், இயற்கை உரம் அதிகளவில் தயார் செய்யப்படுவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வளம் மீட்பு பூங்காவில், மட்கும் குப்பை இயற்கை உரமாகவும், மட்காத குப்பை மறுசுழற்சிக்கும் உட்படுத்தப்படுகிறது.மாவட்ட சிறு விவசாயிகள் இயற்கை உரத்திற்கு படிப்படியாக மாறி வரும் நிலையில், வளம் மீட்பு பூங்காவில் தயாராகும் குப்பை மலைக்காய்கறி தோட்டங்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.தவிர, தோட்டக்கலை துறையின் நேரு பூங்கா மற்றும் வீட்டு தோட்டங்களுக்கும் இந்த உரத்தை பயன்படுத்துவதால், இயற்கை உரத்திற்கான 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது.பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் கூறுகையில், ''கோத்தகிரி நகர பகுதியில் நாள்தோறும் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து, வளம் மீட்பு பூங்காவில் குப்பையை கொட்டி இயற்கை உரம் தயாரிக்கின்றனர். ஆறு டன் இருப்பு உள்ளது. இந்த உரம், 10 ரூபாய்க்கும், இங்கு தயாராகும் மண்புழு உரம், 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதுடன், குப்பையில்லா நகரமாக கோத்தகிரி மாறி வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE