பொது செய்தி

தமிழ்நாடு

பறவை காய்ச்சல் ஆய்வு இல்லை: நீலகிரிக்குள் வரும் கேரள வாகனங்கள்

Added : ஜன 15, 2021
Share
Advertisement
பந்தலுார்:நீலகிரி எல்லையில், பல சோதனைச்சாவடிகளில், வாகனங்களை ஆய்வு செய்யாததால், கோழி வாகனங்கள், மாவட்டத்துக்குள் வருகின்றன.கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி எல்லையில் உள்ள, 8 சோதனைச்சாவடிகளில், '8 கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்,' என, மொத்தம், 24 பேர் கடந்த, 12-ம் தேதி முதல் வரும், 18ம் தேதி வரை
 பறவை காய்ச்சல் ஆய்வு இல்லை: நீலகிரிக்குள் வரும் கேரள வாகனங்கள்

பந்தலுார்:நீலகிரி எல்லையில், பல சோதனைச்சாவடிகளில், வாகனங்களை ஆய்வு செய்யாததால், கோழி வாகனங்கள், மாவட்டத்துக்குள் வருகின்றன.கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி எல்லையில் உள்ள, 8 சோதனைச்சாவடிகளில், '8 கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்,' என, மொத்தம், 24 பேர் கடந்த, 12-ம் தேதி முதல் வரும், 18ம் தேதி வரை பணியாற்ற மாநில அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், பாட்டவயல், சோலாடி உட்பட சில சோதனை சாவடிகளில், கால்நடை துறையினர் யாரும் பணியில் இல்லை. இதனால், கேரள வாகனங்கள் எந்த ஆய்வும் இல்லாமல், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, இது குறித்து, மாவட்ட கலெக்டர் நேரடிய விசாரணை நடத்தி, கால்நடை பராமரிப்பு துறையினர், அனைத்து சோதனைச்சாவடிகளில் ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X