வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புது டில்லி: உலக சுகாதார நிறுவன இணைய பக்கங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனியாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.,விற்கான இந்திய பிரதிநிதி இந்திராமணி பாண்டே ஒரு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ்

புது டில்லி: உலக சுகாதார நிறுவன இணைய பக்கங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனியாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.



latest tamil news



இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா.,விற்கான இந்திய பிரதிநிதி இந்திராமணி பாண்டே ஒரு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோமிற்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“உலக சுகாதார நிறுவன இணையதளங்களில் இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரித்து வரைபடம் உள்ளது. இயக்குனர் என்ற முறையில் உடனடியாக தலையிட்டு அவ்வரைபடங்களை நீக்க வேண்டும். சரியான வரைபடங்களை மாற்றியமைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். முன்னதாக இந்திய தூதரகம் இது தொடர்பாக இரண்டும் கடிதம் அனுப்பியுள்ளதையும் அதில் நினைவுப்படுத்தியுள்ளார்.


latest tamil news



வரைபட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு எழுதப்படும் 3-வது கடிதம் இதுவாகும். கடந்த டிச., 30 மற்றும் ஜன., 3 ஆகிய தேதிகளிலும் இவ்விவகாரம் உலக சுகாதார நிறுவன இயக்குனர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தனியார் ஆங்கில செய்திச் சேனல் ஒன்று நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு “ஐ.நா.,வின் சிறப்பு நிறுவனமான நாங்கள் அதன் வழிகாட்டுதல்கள் படியே வரைபடங்கள் வெளியிட்டியிருக்கிறோம்” என கூறி பொறுப்பை ஐ.நா., மேல் போட்டுவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
15-ஜன-202118:15:32 IST Report Abuse
Velumani K. Sundaram உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் திருவாளர் டெட்ராஸ் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி. இவர் மருத்துவர் அல்லாத இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எத்தியோப்பியா இப்பொழுது சீனாவின் பிடியில், ஸ்ரீலங்காபோல் இருக்கும் அப்பிரிக்காநாடு. ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் தலைமையகம் எத்தியோப்பாவில் உள்ளது. இதனை கட்டிகொடுத்தது சீனா. அதனால் ஆப்பிரிக்கன் ஒன்றியத்தின் ஒப்புதலோடு திருவாளர் டெட்ராஸ் WHO நிர்வாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீனாவின் வலது, இடது கைகளாக இவர் செயலாற்றுவதால்தான் ஜனாதிபதி டிரம்ப் இவரை தூக்கியெறிந்துவிட்டார். கொரோனாவின் மறைக்கப்படும் ரகசியங்களில் இவர்தான் முக்கியமான நபர். சீனாவின் கைகூலியான இவர் அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
15-ஜன-202116:47:22 IST Report Abuse
Murthy வெட்டி விளம்பரம்..... அமெரிக்க, ஐரோப்பிய வரைபடங்களும் இதுபோல்தான் உள்ளன.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஜன-202112:51:29 IST Report Abuse
Sridhar தவறு WHO மீது இல்லை போல இருக்கே? ஐநா வே இந்த வரைபடம் தான் அதிகாரபூர்வமானது என்று சொல்லும் அளவுக்கு பார்வைகள் வித்தியாசப்பட்டு உள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X