பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி பா.ஜ.வில் இணைந்தார்

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அரவிந்த் குமார் சர்மா. கடந்த 1988ல் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். கடந்த 2001ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது அவரது செயலராக பதவி வகித்தார். மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக வலம் வந்தார். கடந்த 2014ல் மோடி பிரதமரானதும் மத்திய அரசு செயலராக பணியாற்ற துவங்கினார். மத்திய சிறு குறு மற்றம் நடுத்தர தொழில்துறை

புதுடில்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அரவிந்த் குமார் சர்மா. கடந்த 1988ல் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். கடந்த 2001ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது அவரது செயலராக பதவி வகித்தார். மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக வலம் வந்தார். கடந்த 2014ல் மோடி பிரதமரானதும் மத்திய அரசு செயலராக பணியாற்ற துவங்கினார். மத்திய சிறு குறு மற்றம் நடுத்தர தொழில்துறை செயலராக பணியாற்றி வந்த அரவிந்த் குமார் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் பா.ஜ.வில் அதிகாரப்பூர்வாக நேற்று இணைந்தார். இவருக்கு உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X