பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருடன் நல்லுறவு பேணுங்கள்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் அறிவுரை

Updated : ஜன 16, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
சென்னை : ''பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்வது என்ற, 'சங்கல்பத்தை' எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத் கூறினார்.சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீ நவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பொங்கல் விழா
RSS, Mohan Bhagwat, Pongal, மோகன் பாகவத்,பொங்கல்

சென்னை : ''பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்வது என்ற, 'சங்கல்பத்தை' எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீ நவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று சிறப்பித்தார். அவருடன், தென் பாரத தலைவர் டாக்டர் வன்னியராஜ், சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், பொது செயலர் கோபால கிருஷ்ணன், மாதவரம் கிராம சங்க தலைவர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

காலை, 7:30மணிக்கு, கோவிலுக்கு வந்த மோகன் பாகவத்திற்கு, பிரசன்ன நரசிம்ம பெருமாள் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் வழிபாடு செய்தார். அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடந்த, கோ பூஜை மற்றும் பொங்கல் பூஜையிலும் பங்கேற்றார். சிறுவர்கள் பங்கு பெற்ற, விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். மேலும், பக்திப்பாடலுடன், அவரை சிறுவர்கள் வரவேற்றனர்.

யினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய மோகன் பாகவத், நாம் பரிமாறிக்கொள்ளும் இனிப்பைப் போல, நமது பேச்சும், செயலும் இனிமையாக இருக்க வேண்டும் என்றார். நம் அனைவருக்கும் சூரியன் ஒளி தருவதைப்போல நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.

பின், மோகன் பாகவத் பேசியதாவது: உங்கள் அனைவருக்கும், பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதம் முழுக்க பொங்கல் கொண்டாடப்பட்டாலும், தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுவது சிறப்பானது. முன்னர், திருப்பூரில் இருந்த போது, மாட்டுப்பொங்கல் விழாவில் பங்கேற்றேன். இன்று சென்னையில் இருப்பதால், உங்களுடன் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறேன்.

இந்த நாளில், நம்பப்படுவது என்னவென்றால், சூரியனின் ரதத்தில் ஒரே ஒரு சக்கரம் தான் இருக்கும். ஆனால், ஏழு குதிரை, ஏழுகடிவாளம் இருக்கும். அந்த ரதத்தை செலுத்த, பெரியசாலை ஏதும் இல்லை. ஆனாலும், தினமும், அவர், கிழக்கில் இருந்து மேற்கிலும், மேற்கில் இருந்து கிழக்கிலும் பயணித்து கொண்டிருக்கிறார்.


latest tamil newsஅதனால், பூஜை என்ன என்றால், நாம் யாரை நோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும் என முயற்சிக்க வேண்டும் என்பது தான்.உதாரணத்திற்கு, லட்சுமி 'சக்தி' ரூபம். நமக்கும், அது போல் சக்தி கிடைக்க வேண்டும் என, முயற்சிக்க வேண்டும். சூரியன் 'தவ' ரூபம். தொடர்ந்து தவமிருந்து ஓய்வின்றி உழைக்கிறார். நாமும் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

நாளைக்கு கோ பூஜை. நான் இன்றே கோ பூஜை செய்தேன். நமக்கு, கோ மாதா அளிக்க கூடிய பல உதவி மற்றும் பொருட்களுக்கு, நன்றி செலுத்தவே,கோ பூஜை செய்கிறோம்.நம்மை சுற்றி உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்கள் உதவியாக உள்ளனர். அவர்களுக்கும், நாம் நன்றி செலுத்த வேண்டும். நாளை மறு தினம் காணும் பொங்கல். அன்று நாம், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அவர்களோடு மட்டும், நம் வாழ்த்துக்களை நிறுத்திக் கொள்ளக் கூடாது. நமக்கு உதவக்கூடிய முடிதிருத்துவோர், துணி துவைப்போர், சலவை தொழிலாளி என, அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர்கள் நலமுடன் இருக்க, நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.இந்த நாட்களில், நாம் சர்க்கரை பொங்கல் உண்டு ருசிக்கிறோம். இது, இனிப்பான விஷயம். அதைப்போல, நமது சொற்களும் இனிப்பாக இருக்க வேண்டும். மற்றவரை காயப்படுத்தும் கடும் சொற்களை, எப்போதும் பேசக்கூடாது.

அதை, முழுமையாக தவிர்க்க வேண்டும். அதைத்தான், 'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்டவடு' என்ற குறள், நமக்கு உணர்த்துகிறது. இனிய வார்த்தைகளால் மட்டுமே பேச வேண்டும்.பொங்கல் என்பது பூஜை செய்யவும், நன்றி செலுத்தவும் மட்டுமல்ல, 'சங்கல்பம்' எடுத்துக்கொள்ள கூடிய தினமாகும். அதனால், நமக்கு உதவிய மற்றும் நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் நன்றி செலுத்தவும், அவர்களது குறைகளை மன்னித்து, அவர்களுடன் இனிய உறவை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Svs yaadum oore - chennai,இந்தியா
16-ஜன-202107:45:11 IST Report Abuse
Svs yaadum oore //.......மேற்கத்திய கிறிஸ்தவன் இவர்களை கிறிஸ்தனவனாக ஏற்பதில்லை ...ரைஸ் பவுல் கிறிஸ்தவர்களே ....//......உண்மைதான் ...ஆனால் இங்குள்ள தி மு க திராவிட வியாதிகள் இதை ஏற்காது ...எவனாவது மேடை போட்டு கூவினால் அதை இங்குள்ள மக்கள் நம்பும் ....வெளி நாட்டிலிருந்து வெள்ளைக்காரன் , அவன் வேலை வெட்டியை விட்டு இங்கு வந்து தங்கி ஓசி சோறு தின்று , இங்குள்ளவனுக்கு தமிழ் சொல்லி கொடுத்தானாம் ....அந்த வெள்ளைக்காரனுக்கு இங்குள்ளவன் சிலை வைப்பான் ....கற்று கொடுக்கும் தமிழ் இனம் அப்போது மட்டும் ஓடி ஒளிந்திவிட்டது .......
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
15-ஜன-202123:31:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஆர் எஸ் எஸ் இயக்கம் இருக்கும் வரை தீய சக்திகளுக்கு உதறல்தான் அதனால்தான் நாங்கள் இந்தியாவின் வளர்ச்சியை எண்ணி எண்ணி பொறாமைப்பட்டு கதறுகிறோம் இம்ரான் விஷயத்தில் பார்த்திருப்பீர்கள்
Rate this:
Cancel
Common man -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-202122:36:51 IST Report Abuse
Common man why is this important to TN?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X