பொது செய்தி

இந்தியா

மகிழ்ச்சி அடைஞ்சிடாதீங்க... விவசாயிகளின் விஷயத்தில் எதிர்கட்சி எல்லாம் கிளம்பி வெற்றியும் பெற்றுட்டாங்களே...

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
பா.ஜ., மட்டும் தான் தமிழர்களின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான பொங்கல். அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே நல்ல விலை நிர்ணயிக்க முடியும்.- பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம்'மகிழ்ச்சி அடைஞ்சிடாதீங்க... விவசாயிகளுக்கு,
பேச்சு_பேட்டி_அறிக்கை,  பாஜ, காயத்ரி ரகுராம், திமுக, ராமலிங்கம், பாஜ, முருகன்,இந்திய கம்யூனிஸ்ட், முத்தரசன்

பா.ஜ., மட்டும் தான் தமிழர்களின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான பொங்கல். அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே நல்ல விலை நிர்ணயிக்க முடியும்.
- பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம்


'மகிழ்ச்சி அடைஞ்சிடாதீங்க... விவசாயிகளுக்கு, 'ஆப்பு' அடிக்க, எதிர்க்கட்சில்லாம் கிளம்பி, வெற்றியும் பெற்றுட்டாங்களே... பாவம் விவசாயிங்க... எதுவுமே புரியாம, தம் தலையில தாமே மண் அள்ளிப் போட்டுக்கிட்டாங்க...' என பரிதாபப்படத் தோன்றும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் பேட்டி.



தமிழர்களுடைய பண்பாட்டை இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் வெளிப்படுத்தும் எண்ணத்தோடு, பா.ஜ., இன்று மிகப்பெரிய முயற்சி எடுத்து இருக்கிறது. நேருவை விட சரியான தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்.
- தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமலிங்கம்


மிகப் பெரிய, 'ஜிங்சாக்' கொட்டும் வகையில், பா.ஜ.,வில் இணைந்துள்ள, தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமலிங்கம் பேட்டி.



வியாபாரத்திற்காக, தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி, நான்கு மொழி கற்று தருகின்றனர். தி.மு.க., தலைவர்களும், கட்சியினரும் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளை கற்று கொடுக்க மாட்டோம் என, 'போர்டு' மாட்ட தயாரா... அவர்கள் தயாராக இல்லை. மக்களை தி.மு.க.,வினர் ஏமாற்றுகின்றனர்.
- பா.ஜ., மாநில தலைவர் முருகன்


latest tamil news




'காலம் காலமா அது தானே நடக்குது... மக்களுக்கு ஒண்ணுமே புரியலியே...' என சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேச்சு.



தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், வரும் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். நாங்கள் கேட்பது மற்றும் கூட்டணி ஒதுக்கும் தொகுதிகள் பற்றி கலந்தாலோசித்து போட்டியிடுவோம்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


'பரவாயில்லையே... தைரியமா கருத்து தெரிவிக்கிறீங்களே...' எனச் சிரிக்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.



கொரோனா காலத்தில், வியாபாரிகள் செலுத்த வேண்டிய கடைகளுக்கான வாடகையை, தமிழக அரசு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். லைசென்ஸ் எடுக்க, 2,000 ரூபாய் ஆன்லைனில் செலுத்த விதிகள் உள்ள நிலையில், 5,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா


'வாஸ்தவமான பேச்சு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி.



முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த, மத்திய, பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதனால் ஏழை, பிற்படுத்தப்பட்டோரின் சட்டம் படிக்கும் கனவு நிறைறேவாமல் போய் விடும்!
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'நம்ம மக்களை முட்டாளுங்கன்னு சொல்றதே உங்களுக்கெல்லாம் வழக்கமா போச்சு...' என சாடத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.


Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
16-ஜன-202108:53:35 IST Report Abuse
karutthu இந்த புன்னகை மன்னனுக்கு நோகாமல் நொங்கு எடுக்கணும்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
16-ஜன-202102:49:08 IST Report Abuse
Baskar முத்தரசன் சொன்னது ஒரு மயக்கத்தில்.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
15-ஜன-202122:32:21 IST Report Abuse
Easwar Kamal பிஜேபி என்றல் எல்லாம் நல்லவர்கள் என்ற என்னதை மக்கள் மனதில் பதிய இவளவு போராட வேண்டாம். மறந்து விடாதீர்கள் நீங்களும் இந்த மக்களில் ஒருவர் தன. உங்களுக்கும் சேர்ந்துதான் இந்த போரட்டம். பிஜேபி ஒன்றும் உங்களுக்கு எதுவும் தூக்கி தரப்போவது இல்லை. எல்லாம் அந்த குஜராத்திகள் படுத்தும் படு அதற்கு ஏற்றார் போல் இந்த பிஜேபி ஆடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X