பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் பொறுமையை சோதனை செய்ய வேண்டாம்: ராணுவ தளபதி எச்சரிக்கை

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: எல்லை பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என இந்தியா உறுதி பூண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் பொறுமையை சோதனை செய்து எந்த தவறையும் யாரும் செய்ய வேண்டாம் என ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு அவர் பேசுகையில், எல்லை பகுதியில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படுத்த சதி செய்தவர்களுக்கு தக்க
IndianArmy, patience, General, Naravane, Ladakh standoff, mistake,  இந்திய ராணுவம், நரவானே, ராணுவதளபதி, சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள், பதிலடி, வீரர்கள்

புதுடில்லி: எல்லை பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என இந்தியா உறுதி பூண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் பொறுமையை சோதனை செய்து எந்த தவறையும் யாரும் செய்ய வேண்டாம் என ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு அவர் பேசுகையில், எல்லை பகுதியில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படுத்த சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பகுதியில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகம் வீண்போகாது என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளோம். அதேநேரத்தில், இந்தியாவின் பொறுமையை சோதித்து தவறை செய்ய வேண்டாம்.


latest tamil newsஇந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்த இந்திய ராணுவம் அனுமதிக்காது. எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா சீனா இடையே எட்டு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தற்போதைய பிரச்னைக்கு பரஸ்பரம் ஏற்று கொள்ளப்படும் வகையில் தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.


latest tamil newsநமது அண்டை நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. எல்லையில், நமது எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்ப்டு வருகிறது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் 400 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது பாகிஸ்தானின் அத்துமீறல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பாகிஸ்தானின் சதியை எடுத்து காட்டுகிறது. டுரோன்கள் மூலமும் ஆயுதங்களை கடத்த முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202117:10:30 IST Report Abuse
Malick Raja கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு .. இது மாந்தர்களுக்குரியது .வாசகர்களில் சிலருக்கு விதிவிலக்கு ..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-ஜன-202116:43:16 IST Report Abuse
வெகுளி சீனன் எதிரி .... அவனை கையாள்வதில் குழப்பமில்லை.... உள்ளூரில் தொப்புள்கொடி என்று கூறிக்கொண்டு எல்லையில் தொல்லை தரும் துரோகிகளை என்ன செய்வது?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
15-ஜன-202119:32:55 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅனால் தொப்புள்கொடி உறவுகள் மோடியை குறை கூறி கருது எழுதலாம்...
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
15-ஜன-202116:32:00 IST Report Abuse
Trichy Mahadevan எதிரின் ட்ரௌன் வந்தவனுடன் நமது வீரல்களால் செயல்இழக்க செய்யும் கருவியை கண்டுபிடிக்க முடியாதா ?.
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
15-ஜன-202118:20:55 IST Report Abuse
Velumani K. Sundaramஅம்பை பிடிப்பதைவிட அம்பெய்தியவனை அடிப்பதுதான் மோடி ஜி ஸ்டைல். வாலாட்டுபவர்களின் வால்களையும் விரைவில் வெட்டுவோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X