இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும்: பிரதமர் தமிழில் டுவீட்

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 15, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில், திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில், தமிழில்
Pmmodi, narendramodi,  திருவள்ளுவர்,  இளைஞர்கள், பிரதமர் மோடி, மோடி, நரேந்திர மோடி

புதுடில்லி: இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில், திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில், தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜன-202117:47:54 IST Report Abuse
g.s,rajan பிரதமர் மோடிஜி அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும் அதனைப் பின்பற்றவேண்டும் என்று கூறி உள்ளார் .சொல்லுதல் யார்க்கும் எளியவாம் சொல்லிய வண்ணம் செயல் ,மோடிஜி கறுப்புப் பணம் கைப்பற்றி அதில் பதினஞ்சு லட்சத்தை பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ஆட்சிக்கு வந்தவுடன் போடுவதாக சொன்னீரே ,அந்தப் பணத்தை மக்களின் வங்கி கணக்கில் போட்டு விட்டாரா ???இதுவரை இன்னும் போடவே இல்லை பிரதமர் மோடிஜி எப்போ போடப் போறாரோ ???அந்த நாளே நம் மக்களின் பொன்னான நாள் .
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
16-ஜன-202111:24:54 IST Report Abuse
Ellamman நீங்களும் தவறாமல் படியுங்கள்... அறத்துப்பால் குறிப்பாக ..... மேலும்....உங்கள் அடிப்பொடி அர்னாப் கோஸ்வாமியை கூட படிக்க சொல்லுங்கள்...எப்படி எல்லாம் மீடியாவை நீங்கள் தயாராக உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை இந்த ஒரு ஆசாமியின் செயல்கள் மூலம் தெளிவாக தெரியவைத்துவிட்டீர்கள்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜன-202107:52:36 IST Report Abuse
தல புராணம் தமிழ் அட்மின் எழுதுனதுக்கு இம்புட்டு அலப்பறையா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X